full screen background image

சதீஷ்-சுரேஷ் ரவி இணைந்து நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

சதீஷ்-சுரேஷ் ரவி இணைந்து நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

மிகச் சிறந்த கதைக் களம் கொண்ட படங்களில் நடிக்கும்போது, அதன் நாயகர்கள் மிக எளிதில் மக்கள் மனதில்  இடம் பிடித்து விடுகிறார்கள்.

அப்படித்தான் காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்திருந்த நடிகர்களான சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர்.

தற்போது இயக்குநர் பிரவீன் சரவணனின் இயக்கத்தில்  நட்பை மையமாக வைத்து உருவாகும் ஒரு புதிய படத்தில், இரட்டை ஹீரோக்களாக இந்த நண்பர்கள் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்தினை The Mapogos Company & Trending Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா மற்றும் மானசா சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கருணாகரன், ஐஸ்வர்யா தத்தா & புகழ் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு விஷ்ணுஸ்ரீ K.S.(ஜாம்பி) ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் பொன்ராஜ்(களத்தில் சந்திப்போம்) படத் தொகுப்பு செய்கின்றார்.

இப்படத்தின் இயக்குநரான பிரவீன் சரவணன் இயக்குநர் பாலாஜி மோகனிடம் மாரி-2’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறவுள்ளது.

 
Our Score