full screen background image

சூரிக்கும், பிரியா ஆனந்துக்கும் எப்படி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாச்சு..? – நடிகர் விஷ்ணுவின் பொறாமை கேள்வி..!

சூரிக்கும், பிரியா ஆனந்துக்கும் எப்படி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாச்சு..? – நடிகர் விஷ்ணுவின் பொறாமை கேள்வி..!

நேற்று நடந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி மிகப் பெரிய அட்ராக்சனாகவே இருந்தார். நேற்றுக்கு அவருக்கு பிறந்த நாளும்கூட. பேசிய அத்தனை பேருமே அவருக்கு பிறந்து நாள் வாழ்த்துகளைச் சொல்ல மனிதர் பூரித்துப் போனார்.

IMG_0050

ஆனால் நடிகர் விஷ்ணு மட்டும் சூரியை லேசாக கரித்துக் கொட்டிவிட்டுப் போய்விட்டார்.

“முன்னாடியெல்லாம் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும்தான் கெமிஸ்ட்ரி நல்லாருக்குன்னு சொல்வாங்க. ஆனா இப்போ அதே படத்துல நடிக்கிற காமெடியனுக்கும், ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இதுவொரு புது டிரெண்ட்டா உருவாகியிருக்கு.. ப்ரியா ஆனந்த்கூட பேசிக்கிட்டிருந்தப்போ இந்தப் படத்துல எனக்கும் சூரிக்கும் நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகியிருக்குன்னு சொன்னாங்க. அதே மாதிரி பிந்துமாதவிக்கும் சூரிக்கும் நல்லா கெமிஸ்ட்ரி இருக்குன்னும் சொன்னாங்க.

நேத்து ஜீவா படத்தோட புரமோஷனுக்கு போயிருந்தேன். அங்க ஸ்ரீதிவ்யாவை பார்த்தேன். அவங்ககிட்ட ‘உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரு?’ன்னு கேட்டா, ‘எனக்கு சூரியைத்தான் ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னாங்க.

சூரி என்னடான்னா ‘மச்சான் ஜிம்முக்கு போறேன்.. உடம்பு நல்லாயிருக்கா?’ன்னு கேட்குறார். ‘சாப்பிட வாங்க’ன்னா ‘சூப் மட்டும் போதும்’னு சொல்றார். இங்க என்ன நடக்குதுன்னே புரியலை..

பொதுவா இந்த கெமிஸ்ட்ரின்றது ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும்தான வரும்..? அதெப்படி காமெடியனோட வந்துச்சு..? இப்படி புதுசா ஒரு கெமிஸ்ட்ரி ட்ரெண்ட்டை சூரி உருவாக்கிட்டு வர்றார்ன்னு நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்…” என்று வாழ்த்து சொல்வது போல சொல்லி பொறாமைத் தீயை கொட்டிவிட்டுப் போனார் விஷ்ணு விஷால்.

சூரி அண்ணே.. நிறைய பேர் கண்ணு போட்டுட்டாங்க. திருஷ்டி சுத்திப் போடுங்க..!

Our Score