full screen background image

“திருட்டு விசிடி தயாரிப்புக்கு போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள்..” – நடிகர் விஷால் ஆச்சரியம்..!

“திருட்டு விசிடி தயாரிப்புக்கு போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள்..” – நடிகர் விஷால் ஆச்சரியம்..!

“திருட்டு விசிடிகள் தயாரிப்புக்கே போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலையெல்லாம் பார்த்திருக்காங்க…” என்று ஆச்சரியப்படுகிறார் நடிகர் விஷால்.

‘ஆம்பள’ படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட்டில் நடிகர் விஷால் பேசும்போது, “நான் எதிர்பார்த்த மாதிரியே ‘ஐ’ படத்துக்கும், ‘ஆம்பள’ படத்துக்கும் திருட்டு விசிடிகள் மூணு நாள்ல வந்திருச்சு. ஆனா அது தரமான பிரிண்ட் இல்லை. பொதுவா இது மாதிரியான திருட்டு விசிடி தயாரிப்பெல்லாம் தியேட்டர் புரொஜெக்சன் அறையில் இருந்துதான் படமாக்குவாங்க.  ஆனா இந்த பிரிண்ட்ல சீட்ல உக்காந்துக்கிட்டே எடுத்திருக்காங்க. பிரிண்ட்டும், வாய்ஸும் சரியா வரலை.

அதனால் என்ன செஞ்சிருக்காங்கன்னா.. ஒரு தியேட்டரில் படத்தையும், இன்னொரு தியேட்டரில் சவுண்டையும் எடுத்து மிக்ஸிங் பண்ணி.. அவங்களே இதுக்காக போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைப் பார்த்திருக்காங்க. நாங்க கஷ்டப்பட்டு படம் தயாரிப்பது போல, அவங்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் திருட்டு விசிடி தயார் செஞ்சிருக்காங்க.

பரவாயில்லை. இந்த அளவுக்கு பயந்திருக்காங்களே. இதுவே போதும்தான். இதுவே திருட்டு விசிடிக்கு எதிரா நான் எடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றிதான். இனிமேலும் தொடர்ந்து திருட்டு விசிடிக்கு எதிரா போராடுவேன். யாராக இருந்தாலும் விடமாட்டேன்..” என்றார்.

Our Score