full screen background image

திருட்டு விசிடிக்காரர்களை பிடித்துக் கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் பரிசாம்..!

திருட்டு விசிடிக்காரர்களை பிடித்துக் கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் பரிசாம்..!

தியேட்டரில் கேமரா வைத்து திருட்டு வி.சி.டி தயாரிக்க உதவுவோரை பிடித்துக் கொடுத்தால்  ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக விஷால் அறிவித்திருக்கிறார்.

கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில் விஜய் R. ஆனந்த், A.R.சூரியன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள  படம் ‘விளையாட்டு ஆரம்பம்.’

இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார்    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

DSC_9651

விழாவில் தயாரிப்பாளர்  கலைப்புலி எஸ்.தாணு,  இயக்குநர் பாலா, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர்  விஷால், அருண்பாண்டியன் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சாட்டை அன்பழகன், ஷக்தி N.சிதம்பரம், பிரவீன்காந்த், மன்சூர் அலிகான் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், பி.எல்.தேனப்பன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.                                                                  

விழாவில் நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான  விஷால் பேசும்போது, “எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது. வீட்டில் ஆஸ்பத்திரிக்கு போவதாக சொல்லிவிட்டு இந்த விழாவிற்கு வந்து விட்டேன்.

DSC_9642

பெரோஸ்கான் மகன் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு அப்பாவிற்கு தன் மகன் பெரிய ஹீரோவாவது ரொம்ப பிடிக்கும். எங்க அப்பாவும் என்னை இப்படிதான் வளர்த்தார். அதனால்தான் இந்த விழாவிற்கு வந்தேன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இன்றைக்கு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறோம்.

தியேட்டரில் படம் ஓடும்போது அதை கேமரா வைத்து காப்பி செய்து திருட்டு வி.சி.டி, பைரஸி தயாரிக்கும்  வேலை செய்பவர்களை கையும் களவுமாக பிடித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கொடுத்து போலீஸில் எப்.ஐ.ஆர் போட உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ருபாய் ஒரு லட்சம் பரிசாக தரப்படும். இந்த நடவடிக்கையால் திருட்டு வி.சி.டி தயாரிப்பு கட்டுப்படுத்தப்படும்…” என்றார்.

director bala

இயக்குநர் பாலா பேசும்போது, “இந்தப் படத்தின் ஹீரோவான யுவன் என்னுடைய படத்தில் நடிப்பதாக இருந்த்து. சிற்சில காரணங்களினால் அது தள்ளிப் போடப்பட்டுள்ளது. நிச்சயமாக அதை நான் படமாக்குவேன்.

அந்தப் படத்தில் யுவனின் கேரக்டருக்காக பரோட்டா மாஸ்டர் வேலையைக் கற்றுக் கொள்ளச் சொன்னேன். அது எப்படியென்றால் பத்தடி தூரத்தில் இருந்து ஒருவர் மாவை உருட்டி, புரட்டி எடுத்து வீசுவார். அதை பார்க்காமலேயே கையை மட்டும் உயர்த்தி அந்த மாவைப் பிடித்து விரித்து பட்டென்று அடுப்பில் வைத்து சுட வைக்க வேண்டும்.

yuvan-bala

இது அத்தனை சுலபமில்லை. கடுமையான பயிற்சி இருந்தால்தான் படப்பிடிப்பில் எளிதாக செய்ய முடியும். இதனால் யுவனை அந்தப் பயிற்சியைக் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தேன். ச்சும்மா சாதாரணமாக நாமளே அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால்கூட ஒரு மாதமாகும்.

ஆனால் யுவன் மூன்றே நாட்களில் திரும்பி வந்தான். ஒருவேளை பிடிக்காமல் வந்துவிட்டானோ என்று விசாரித்தேன். மூணு நாள்ல தம்பி எல்லாத்தையும் கத்துக்கிட்டாப்புல என்று உடன் வந்தவர்கள் சொன்னார்கள். தம்பி யுவன் அவ்வளவு டெடிகேஷனான நடிகன். நிச்சயமாக இவனுக்கு ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்த் திரையுலகத்தில் உண்டு…” என்றார் இயக்குநர் பாலா.

Our Score