நடிகர் விஜய் படக் குழுவினருடன் சென்னை திரும்பினார்

நடிகர் விஜய் படக் குழுவினருடன் சென்னை திரும்பினார்

படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றிருந்த நடிகர் விஜய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய்யுடன் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

ஜார்ஜியாவுக்கு இந்த மாதம் வாக்குப் பதிவு நடந்த அன்றைய நாள் இரவிலேயே கிளம்பினார் விஜய். கடந்த 7-ம் தேதி முதல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தியின்படி அந்தப் படக் குழுவில் இருந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் படக் குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்து ஹோட்டலில் காத்திருந்தனர்.

அந்த ரிசல்ட்டுக்குப் பிறகு எடுக்க வேண்டிய காட்சிகளை மிக வேக. வேகமாக படமாக்கிக் கொண்டு சென்னை திரும்பியுள்ளனர் படக் குழுவினர். நடிகர் விஜய்யும் இவர்களுடன் இணைந்து நேற்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார்.

இனிமேல் அடுத்த மாதம் மே இரண்டாவது வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பின்போது டூயட் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டவுள்ளன.

ஆனால், இதற்கான ரிகர்சல்கள் இன்று தொடங்க இருந்த நிலையில் கொரோனாவால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தப் பயிற்சியே தற்போது தடைபட்டுள்ளது. எனவே இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பும் நிச்சயமாகத் தள்ளிப் போகும் என்றே தெரிகிறது.

எப்படியிருந்தாலும் இந்தப் படத்தை இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் விஜய்யும், தயாரிப்பாளரும் உறுதியாக இருக்கிறார்கள்.

 
Our Score