கமல் பிறந்த நாள் பார்ட்டியில் நடனமாடிய நடிகர் விஜய்..!

கமல் பிறந்த நாள் பார்ட்டியில் நடனமாடிய நடிகர் விஜய்..!

நடிகர் கமல்ஹாசன் கடந்த வெள்ளியன்று இரவு தனது பிறந்த நாளையொட்டி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடினார்.

தனது நெருக்கமான திரையுலக நண்பர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாராம் கமல். நடிகர் விஜய், நடிகை குஷ்பு, நடிகர் மாதவன் ஆகியோரும் வந்திருந்து கமலை வாழ்த்தியிருக்கிறார்கள். கவுதமி தனது மகளுடன் கலந்து கொண்டார். கேக் வெட்டிய கமல்ஹாசன் கவுதமிக்கும் அவரது மகளுக்கும் கேக்கை ஊட்டினார்.

கமல் இந்த நிகழ்ச்சியில் மிக சந்தோஷமாக நடனமாடியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் விஜய்யை ‘இனிமை இதோ இதோ’ பாடலுக்கு ஆடும்படி வற்புறுத்த லேசாக மூவ்மெண்ட்ஸ் மட்டுமே செய்திருக்கிறார் விஜய்.

அந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த யாரோ ஒரு பிரபலம் இதனை செல்போனில் ரெக்கார்டு செய்து யூடியூபில் அப்லோட் செய்திருக்கிறார்.

அந்த வீடியோ இது :

Our Score