ஜெயலலிதாவிற்கும், நரேந்திர மோடிக்கும் நடிகர் விஜய் வாழ்த்து..!

ஜெயலலிதாவிற்கும், நரேந்திர மோடிக்கும் நடிகர் விஜய் வாழ்த்து..!

வாழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குபோதே வாழ்த்திவிடுவதுதான் புத்திசாலியின் வேலை. இதைத்தான் நடிகர் விஜய் செய்திருக்கிறார். அனைவரையும் முந்திக் கொண்டு முதல்வருக்கும் வருங்கால பிரதமருக்கும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

நரேந்திர மோடியை கோவைவரையிலும் சென்று சந்தித்து வந்த விஜய்க்கு, பக்கத்தில் இருக்கும் போய்ஸ் கார்டன் கதவு இன்றுவரையிலும திறக்கப்படவில்லை. அது என்றைக்காவது திறக்காதா என்கிற ஆதங்கத்தில்தான் அவரும் இருக்கிறார். இனியும் திறக்குமா என்பது சந்தேகம்தான்..

இது நடிகர் விஜய்யின் வாழ்த்துச் செய்தி..!

vijay-statement-1

“என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கு வணக்கம்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் இந்திய அலவில் ஒர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக அளவில் மாபெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை ஒரு வல்லரசு நாடாகவும்,  இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றிக் காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன்.

வாழ்க இந்தியா.. வளர்க தமிழகம்..!”

Our Score