full screen background image

நடிகர் விஜய் நடிக்கும் 66-வது படம் இன்று பூஜையுடன் துவங்கியது.

நடிகர் விஜய் நடிக்கும் 66-வது படம் இன்று பூஜையுடன் துவங்கியது.

நடிகர் விஜய் நடிப்பில் 65-வது படமாக உருவாகியிருக்கும் ‘பீஸ்ட்’ படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

விஜய்யின் இந்த 66-வது படத்தை தெலுங்குலகின் மிகப் பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநரான வம்சி பைடிபல்லி எழுதி, இயக்குகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இயக்குநர் – வம்சி பைடிபில்லி, கதை, திரைக்கதை – வம்சி பைடிபில்லி, ஹரி, ஆஷீஸோர் சாலமன், வசனம் – விவேக், தயாரிப்பாளர்கள் – தில் ராஜூ, சிரீஷ், தயாரிப்பு நிறுவனம் – வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ், இணை தயாரிப்பு – ஹர்ஷித் ரெட்டி, ஹன்சிதா, இசை – எஸ்.தமன், ஒளிப்பதிவு – கார்த்திக் பழனி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், தயாரிப்பு வடிவமைப்பு – சுனில் பாபு, வைஷ்ணவி ரெட்டி, ஒப்பனை – நாகராஜூ, உடைகள் – தீபாலி நூர், விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்றைக்கு பூஜை நிகழ்வுடன் துவங்கியது.

Our Score