full screen background image

“அரண்மனை-3′ அமர்க்களமா இருக்கும்..” – நடிகர் விச்சு விஸ்வநாத்தின் கணிப்பு

“அரண்மனை-3′ அமர்க்களமா இருக்கும்..” – நடிகர் விச்சு விஸ்வநாத்தின் கணிப்பு

நவரசமான நடிப்புடன், நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர்  விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர்.

1990-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் மணிவண்ணன் இயக்கி வெளியான சந்தனத்தேவன்’ படத்தில்தான் விச்சு விஸ்வநாதன் ஒரு நடிகராக தமிழ்ச் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். மேலும் 65-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் விச்சு விஸ்வநாத் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து டி.ராஜேந்தருடன் ‘சாந்தி எனது சாந்தி’, அஜீத்துடன் ‘நேசம்’, ‘பவித்ரா’, பிரபுவுடன் ‘உறுதிமொழி’, ‘தேடினேன் வந்தது’, சத்யராஜூடன் ‘அமைதிப்படை’, ‘தாய் மாமன்’, ‘வீரப்பதக்கம்’, கார்த்திக்குடன் ‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘மேட்டுக்குடி’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, ரஜினியுடன் ‘அருணாச்சலம்’, ‘வின்னர்’, ‘கிரி’, ‘வீராப்பு’, ‘இதயத்தாமரை’, ‘கலகலப்பு-1, 2’, ‘அரண்மனை-1, 2, 3’ ஆகிய முக்கியமான படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், நடிகை ராதிகா சரத்குமாருடன் ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’ ஆகிய மெகா தொலைக்காட்சித் தொடர்களிலும், குஷ்புவுடன் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘நந்தினி’ ஆகிய மெகா தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

30 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர்  விச்சு விஸ்வநாத் தனது திரைப்பட பயணம் பற்றிக் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இதே தமிழ்த் திரையுலகத்தில் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளேன். நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்புபவன் நான்.  அதனால்தானோ, என்னவோ நான் குணசித்திரம் கலந்த நகைச்சுவை வேடங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

தற்போது இயக்குர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3’ படத்தில் நடித்துள்ளேன். ‘அரண்மனை’யின் முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசமான தோற்றித்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது ‘அரண்மனை-3’ படத்திலும் அதே போல் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குர் சுந்தர்.C அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி அரண்மனை-3’ படம் அமைந்துள்ளது…” என்றார்.

Our Score