full screen background image

“பஸ் பஞ்சர்; டிரெயின் லேட்டு” – ஆனாலும் போராடி நடித்து வெற்றி கண்ட நடிகர் வெங்கட்சுந்தர்..!

“பஸ் பஞ்சர்; டிரெயின் லேட்டு” – ஆனாலும் போராடி நடித்து வெற்றி கண்ட நடிகர் வெங்கட்சுந்தர்..!

கொங்கு மண்டலத்தில் இருந்து தமிழ்ச் சினிமாவிற்கு கொடையாக கிடைத்தவர்கள் சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன். இவர்கள் மூவரும் இணைந்தால் நக்கலுக்கும், நையாண்டிக்கும் குறைச்சலே இருக்காது. அவர்கள் ஊரிலிருந்து காமெடி நடிகராக களமிறங்கியுள்ளார் நடிகர் வெங்கட் சுந்தர்.

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கும் ‘கப்பல்’ படத்தில் ‘பட்டாபி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

திரையுலகத்தில் நுழைந்தது பற்றியும், ‘கப்பல்’ படத்தின் அனுபவங்களையும் பற்றியும் நம்மிடம் பேசினார்.

venkat sundar

“இதற்கு முன்பு குறும்படங்களில் நடித்து கொண்டு இருந்தேன். ஷங்கர் சாரின் ‘நண்பன்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். பிறகு சிறு சிறு கதாபாத்திரங்கள் என நகர்ந்த நேரம். ‘கப்பல்’ பட இயக்குநர் கார்த்திக் எனக்கு இந்த கதாபாத்திரம் அளித்தார்.

ஒவ்வொரு முறையும் கோயம்புத்தூரிலிருந்து இங்கே வரும்பொழுது பஸ் பஞ்சர் ஆகிடும், Train லேட் ஆகிடும். வேற யாரும் நடிச்சிருவாங்களோ என்று யோசித்து கொண்டே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கடைசியா வந்து சேருவேன்.

படத்தில் என்னுடன் நண்பர்களாக நடித்த கருணா, அர்ஜுன் மூவரும் இப்போதும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள். ஞாபக மறதிமிக்க ‘பட்டாபி’ கதாபாத்திரத்தின் முக ஜாடை அமைத்திருந்தது.. எனினும் ‘எதோ குறையுதே’ என்றார் இயக்குநர் கார்த்திக். உடனே அருகிலிருந்த பவுடரை நெற்றியில் பூசிக் கொண்டேன். அப்போதே அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

சின்ன வயசுல இருந்து நடிக்க மட்டும்தான் ஆசைப்பட்டேன். இங்க சினிமாவுக்குள்ள வந்தவுடனேயே டான்ஸ் ஆட சொல்லிட்டாங்க. இந்த படத்துல ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாட்டுக்கு என்னமோ செஞ்சு என்னை ஆட வச்சார் தினேஷ் மாஸ்டர். படத்தில் ஹிந்தி பேசுற மாதிரி வருகிற காட்சியில். எங்களுக்கு தெரிஞ்ச எல்லாம் மொழியையும் பேசி நடிச்சுட்டோம்.

ஷங்கர் சார் படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் அறிமுகமான நான், இன்று அவரது ‘S’ பிக்சர்ஸின் கப்பல் மூலம் அனைவருக்கும் தெரியும்படி மாறியுள்ளேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், ‘I’ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எனக்கு உறுதுணையாய் இருக்கும் குடும்பத்தாருக்கும். அனைத்திற்கும் மேலாக என்னை ஏற்று கொண்ட ரசிகர்களுக்கும் நன்றி..” என நெகிழ்ச்சியுடன் கூறினார் வெங்கட் சுந்தர்.

Our Score