நடிகர்-தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு..?

நடிகர்-தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு..?

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலினின் மகனும், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

இதற்காக தனது வேட்பு மனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தனது சொத்துப் பட்டியலையும் இணைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு 28 கோடியே 82 லட்சமாகும்.

உதயநிதியின் பெயரில் 21 கோடியே 13 லட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 736 ஆகும்.

தற்போது உதயநிதியின் கையில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும், மொத்த வருட வருமானம் ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 520 என்றும் கூறப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு 1 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனும் உள்ளதாம். 2019-20-ல் வருமான வரியாக 4.89 லட்சம் ரூபாயைக் கட்டியுள்ளார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி பெயரில் 55 லட்சத்து 4 ஆயிரத்து 730 ரூபாய் மதிப்புள்ள 1,600 கிராம் மதிப்புள்ள தங்கம் உட்பட 1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்து இருப்பதாகவும், 50 ரூபாய் ஆயிரம் கையிருப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருத்திகா உதய்யின் மொத்த வருவாய் 17 லட்சத்து 44 ஆயிரத்து 470 ரூபாய் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் மீது தமிழகம் முழுவதிலும் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை ஸ்டாலினைவிடவும் மகன் உதயநிதியின் சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகமாகும்.

Our Score