‘சீதக்காதி’ படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில்!

‘சீதக்காதி’ படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில்!

தனது ‘சீதக்காதி’ படம் மூலம் தனக்கு நெருங்கிய நண்பர்கள் பலரையும் திரையுலகிற்கு கொண்டு வந்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் மிகப் பெரும் நடிகர்கள் நடித்துள்ளனர்.

அவர்களின் கதாபாத்திரங்களை வரிசையாக வெளியிட்டு, ஒரு ஆழமான நுண்ணறிவை ரசிகர்களுக்கு வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. வரும்

டிசம்பர் 20-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியிட  திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அது நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரரான சுனில்தான்.

சுனில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இவருடைய அறிமுகம் பற்றி படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், “உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டு பிடிப்பது எங்களுக்கு ஒரு மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்தது. கதாபாத்திரத்தின் இயல்புதான் அதற்கு முக்கிய காரணம்.

actor sunil-2

திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது. இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம்.

இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களைகூட பரிசீலனை செய்தோம். அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை.

ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக  நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். உடனடியாக என் வில்லனை அவரிடத்தில் கண்டேன்.

முதலில் ஆடிஷனில் கலந்து கொள்ளவே அவருக்கு ஒரு சிறு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார். குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார் சுனில். 

 ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ‘பக்ஸ்’ கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் பேசப்படும்…” என்றார். 

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த ‘சீதக்காதி’ படத்தை தயாரித்திருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் தோற்றம் மூலம் படத்தின் மீதான நமது ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியான கோவிந்த் வசந்தா இசையமைத்த முதல் சிங்கிள் பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Our Score