full screen background image

2.15 மணி நேரம் மகாபாரதச் சொற்பொழிவாற்றிய நடிகர் சிவக்குமார்..!

2.15 மணி நேரம் மகாபாரதச் சொற்பொழிவாற்றிய நடிகர் சிவக்குமார்..!

என்றும் மார்க்கண்டேயனான மூத்த நடிகர் சிவக்குமார் அடுத்து மகாபாரதத்தை கையில் எடுத்துள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாக இராமாயணம் பற்றிய சொற்பொழிவை பல்வேறு ஊர்களில், பல்வேறு கல்லூரிகளில் பேசி வந்தார் நடிகர் சிவக்குமார்.

நடிப்புக்கு முற்றிலுமாக முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர ஆன்மீகப் பேச்சாளராகவே மாறிவிட்ட சிவக்குமாரின் இந்த திடீர் அவதாரம் பொதுவான தமிழக மக்களை கவர்ந்துள்ளது. படித்தவர்கள் மத்தியில் அவருக்கான மரியாதையும் பெரிதும் உயர்ந்தது.

அவர் ஆற்றிய இராமாயாண சொற்பொழிவு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிறகு பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் அழைப்பு வந்து கொண்டேயிருந்தது. அவரும் பல மேடைகளில் இது பற்றி பேசி வந்தார்.

இந்த நிலையில் அடுத்து மகாபாரதத்தையும் இதேபோல சொற்பாழிவாக உரையாற்ற பயிற்சி எடுத்து வந்தார் நடிகர் சிவக்குமார். அதனாலேயே கடந்த ஒரு வருட காலமாக அவர் அதிகமாக எந்த விழாக்களிலும் பேசாமல் ஒதுங்கியிருந்தார்.

கடந்த இராமாயணம் காவியத்தின் முதல் சொற்பொழிவு நடைபெற்ற அதே ஈரோடு வெள்ளாளர் மகளிர் கலைக் கல்லூரியிலேயே மகாபாராதத்தின் சொற்பொழிவும் நேற்றைய தினம் நடைபெற்றது.

நடிகர் சிவக்குமார் இராமாயணம் சொற்பொழிவின்போது தனது குடும்பத்தினரை அழைத்துச் செல்லவில்லை. இதனால் அவர்கள் அனைவருமே விஜய் டிவியின் ஒளிபரப்பில்தான் அதனை பார்த்தார்கள். அப்போது நாங்களும் நேரில் வந்து கேட்டிருந்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணியிருந்தார்கள்.

இப்போது மகாபாரதச் சொற்பொழிவை நேரில் காண வேண்டி நடிகர் சிவக்குமாருடன் குடும்பம் மொத்தமும் ஈரோடு வந்திருந்தார்கள். சிவக்குமாரின் மனைவி, மகள் பிருந்தா, மகன்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி, மருமகள்களான நடிகை ஜோதிகா, ரஞ்சனி ஆகியோரும் உடன் வந்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட 2 மணி 15 நிமிடங்கள் மேடையில் மகாபாரதம் பற்றி அற்புதமாக, தங்கு தடையில்லாமல் மிக நீண்ட விவரணைகளுடன் ஒரு குறிப்புகூட கையில் வைத்துக் கொள்ளாமல் மனப்பாடமாக சிவக்குமார் பேசியது கல்லூரி மாணவிகளை மகிழ்ச்சியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score