full screen background image

ஓவியத்தின் மூலம் கிடைத்த பெருமை, சினிமாவைவிட பெரியது..! நடிகர் சிவக்குமார் பேச்சு..!

ஓவியத்தின் மூலம் கிடைத்த பெருமை, சினிமாவைவிட பெரியது..! நடிகர் சிவக்குமார் பேச்சு..!

40 ஆண்டு காலம் தமிழ்ச் சினிமாவில் நடித்து, தனக்கென்று ஒரு மரியாதையையும், பெருமையையும் சேர்த்து வைத்திருக்கும் நடிகர் சிவக்குமார் இதெல்லாம் தனக்கிருக்கும் இன்னொரு திறமையான ஓவியக் கலை முன்பு பூஜ்ஜியம் என்கிறார்.

நேற்றைக்கு நடைபெற்ற மெட்ராஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது ஓவியக் கலை பற்றி பெருமையாகப் பேசினார்.

“நான் ஒரு நடிகன் என்று சொல்லிக் கொள்வதைவிட ஓவியன் என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்… சென்னைக்கு வந்த முதல் 7 வருடங்கள் மட்டுமே நான் ஓவியனாக வாழ்ந்தேன். ஓவியத்தின் அனைத்து பிரிவுகளிலும் கலெக்சன்ஸ் நிறைய வைச்சிருக்கேன். என் கையால வரைஞ்ச படங்களே ஆயிரக்கண்ககுல இருக்கு. அதையெல்லாம் உங்களுக்காக எக்ஸ்பிஷனா நடத்தவும் ஒரு ஐடியா இருக்கு.. அந்த ஓவிய வாழ்க்கை எனக்குக் கொடுத்த திருப்தி, அதுக்கடுத்து எனக்குக் கிடைச்ச இந்த 40 வருஷ சினிமா வாழ்க்கைல கிடைக்கவே இல்லை..

சினிமாவில் ஜெயித்த பின்பு ஒரு நாள் ஓவியர் கோபுலுவை பார்க்கச் சென்றேன். கையோடு நான் வரைந்த இரண்டு ஓவியங்களையும் கொண்டு சென்றேன். தஞ்சை கோவிலை நானே வரைந்த ஓவியமும் அதில் ஒன்று.. அந்த ஓவியங்களை கோபுலுவிடம் காட்டி ‘எப்படியிருக்கு’ன்னு கேட்டேன். அவர் என் கையை வாங்கி தன் கையில் வைத்துக் கொண்டு ‘வாட் எ ஹேண்ட்’ என்றார்.. எனக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.. இந்த ஒரு திருப்தி, சந்தோஷத்தை.. சினிமா எனக்குக் கொடுக்கலை..” என்றார்.

அண்ணன் சிவக்குமாருக்காச்சும் திருப்திபட்டுக் கொள்ள ஓவியக் கலை இருக்கு.. அவருடைய பிள்ளைகள் 40 வருஷம் கழிச்சு என்ன சொல்வாங்களோ..?

Our Score