full screen background image

எனக்குக் கல்யாணம் செட்டாக மாட்டேங்குது – விரக்தியில் நடிகர் சிம்பு..!

எனக்குக் கல்யாணம் செட்டாக மாட்டேங்குது – விரக்தியில் நடிகர் சிம்பு..!

காதல் மன்னன் சிம்புவுக்கு காதல் மீதும், கல்யாணம் மீதும் அப்படியென்ன வெறுப்பு என்று தெரியவில்லை. மிக விரக்தியாக பேசியிருக்கிறார் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில்..

காதல் பற்றிய கேள்விக்கு…..

“ஆட்டோகிராப்’ படம் பார்த்திருப்பீங்க, அதுல இயக்குநர் சேரனுக்கே 3 காதலிகள் இருப்பாங்க. நான் சிம்புங்க. கொஞ்சம் யோசிங்க. ஸ்கூல்ல, காலேஜ்ல இப்படி 3 காதலிகள் சேரனுக்கு இருக்குறப்போ எனக்கு இப்போ 30 வயசாகுது. நானும் ரொம்ப சின்ன வயசுலதான் லவ் பண்ணினேன்.

இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியமான எமோஷன் லவ்வுதான். லவ் பண்றப்போ நாம நிறைய விஷயங்கள கத்துக்க முடியுது. கத்துக்கிட்ட விஷயங்கள் நம்மளோட வாழ்க்கைக்கு பாசிட்டிவா தேவைப்படுது, இல்லன்னா நெகட்டிவா தேவைப்படுது. சில பேருக்கு காதல்ல ஜெயிச்சது மூலமா வாழ்க்கையே மாறியிருக்கு. சில பேருக்கு காதல்ல தோற்றது மூலமா வாழ்க்கையே மாறியிருக்கும். எல்லாருக்குமே லவ் ஒரு அனுபவம்தான். பலர் அதை உபயோகிக்காம, கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிறாங்க. நான் அதை சரியா உபயோகப்படுத்தி இருக்கேன்னு நினைக்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.

கல்யாணம், குழந்தைகள் பற்றிய கேள்விக்கு…..

“பேமிலி, குழந்தைங்க… கேட்க நல்லாத்தான் இருக்கு. அதானே எல்லாரும் பண்றாங்க. உங்களுக்கெல்லாம் கல்யாணம் செட்டாகுது. எனக்கு செட்டாக மாட்டேங்குது. எனக்கு முதல்ல கல்யாணம் செட்டாகுமா, செட்டாகாதான்னு தெரியணும். வாழ்க்கைல இப்போதான் டிரான்சிஷன் கட்டத்துல இருக்கேன். ஆன்மிகத்துல போயிட்டு இருக்கும்போது, என்னை நம்பி இருக்குறவங்கள நான் எப்படி கட்டாயப்படுத்த முடியும்? நான் பண்றத நீயும் பண்ணணும்.. உனக்கு அது புரியணும்னு நான் ஒரு கட்டதுக்கு மேல சொல்ல முடியாது. இரண்டாவது, நான் தனியா இருக்கும்போதுதான் ஒரு சில விஷயங்கள் பண்ண முடியும். இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சுதான், கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்கணும். இப்போ இருக்குற சூழ்நிலையில், கல்யாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியல….” என்று சொல்லியிருக்கிறார்.

காதல் மனனன் சிம்பவு்ககு காதலும், கல்யாணமுமா முக்கியம்..?

Our Score