full screen background image

“மத்தவங்க டூயட் பாடுறதை பார்த்தாலே வயிறு எரியுது..” – நடிகர் சத்யராஜின் லொள்ளு பேச்சு..!

“மத்தவங்க டூயட் பாடுறதை பார்த்தாலே வயிறு எரியுது..” – நடிகர் சத்யராஜின் லொள்ளு பேச்சு..!

சமீபத்தில் நடந்து முடிந்த நைட் ஷோ திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் ஹைலைட் நடிகர் சத்யராஜின் பேச்சுதான்.

அவருடைய பேச்சில் இருந்து சில பகுதிகள் :

“இப்போ சினிமா வசூல்ன்னாலே மூணு நாள்தான்.. வெள்ளி, சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்களில் அள்ளுனாதான். அந்த அள்ளுதான் படத்தோட வசூலே.

Night Show Trailer Launch Stills (20)

இப்போ நானும் இளைஞர்கள் கூட்டணியில் சேர்ந்துவிட்டேன். இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு சூர்யா வந்ததுல எனக்கு ரொம்பவும் சந்தோஷம். அவர் சூப்பர் ஸ்டார் ரேஞ்ச்சுல இருக்குறதையும் தாண்டி சிவக்குமார் பையன் என்பதில்தான் எனக்கு அதிக சந்தோஷம். எனக்கு அவரை பொறந்ததுல இருந்தே தெரியும்.

ஆந்திரால தமிழ்ச் சினிமா நடிகர்களில் சூர்யாவுக்குத்தான் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது எனக்கும் தெரியும். நானும் சினிமாவில்தானே இருக்கிறேன்.? ஆனாலும் அவ்வப்போது நான் தெலுங்கு சினிமாக்களில் நடிக்கும்போது வேண்டுமென்றே அங்கே பணியாற்றுபவர்களிடத்தில் ‘இப்போ யாருப்பா இங்க டாப்பு..? எந்த தமிழ் நடிகரின் படத்துக்கு அதிக வரவேற்பு..? அதிக வசூல்..?’ன்னு தெரியாத மாதிரி கேப்பேன். எல்லாரும் ஒரே பதிலைத்தான் சொல்றாங்க. அது ‘சூர்யா’ன்னு.. தெரிஞ்சுக்கிட்டேதான் கேக்குறேன். ஏன்னா.. ‘சூர்யா’ன்னு ஒரு பதில் வருது பாருங்க. அந்த பதிலைக் கேக்கும்போது நமக்கு ஒரு சந்தோஷம் கிடைக்குது. அதுக்காகத்தான்..!

Night Show Trailer Launch Stills (10)

இயக்குநர் விஜய் எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர். ‘தலைவா’ படம் பண்ணும்போது இன்னும் நெருக்கமாயிட்டாரு. ஒரு நாள் “மலையாள ‘ஷட்டர்’ படத்தை ரீமேக் பண்றோம். நீங்க நடிக்கிறீங்களா..?”ன்னு கேட்டார். பார்ப்போமேன்னு நினைச்சு படத்தைப் பார்த்தேன். மிரண்டுட்டேன். எப்படி இந்தக் கதையை இயக்குநர் ஜாய் மேத்யூ ரெடி செஞ்சாருன்னு தெரியலை. ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

Night Show Trailer Launch Stills (5)

‘இசை’ படத்தோட ஷூட்டிங்கப்போ எஸ்.ஜே.சூர்யாகிட்ட இந்தக் கதையை சொன்னேன். அவரும் கேட்டுட்டு அரண்டுட்டார்.. ‘ஸார். நல்ல கதை ஸார்.. மிஸ் பண்ணிராதீங்க.. ஆண்டனி இயக்குநர். எம்.எஸ்.பிரபு கேமிராமேன்.. யூகிசேது டயலாக் எழுதுறார். விஜய் தயாரிக்கிறார். இதுக்கு மேல என்ன வேணும்..? தயவு செஞ்சு மிஸ் பண்ணிராதீங்க’ன்னு திரும்பத் திரும்பச் சொன்னாரு சூர்யா.

எனக்கு அதுக்கப்புறம் ஒரு குழப்பம் வந்திருச்சு.. இதுல எந்த கேரக்டர்ல நான் நடிக்கிறதுன்னு..? யூகிசேது கேரக்டர்ல நடிக்கிறதா இல்ல லால் நடிச்ச கேரக்டர்ல நடிக்கிறதா.. இல்ல.. ஆட்டோ டிரைவர் கேரக்டர்ல நடிக்கிறதான்னு.. அப்போ ஹீரோயின்கூட செலக்ட் ஆகலை.. யோசிச்சு பார்த்து சரி.. எந்தக் கேரக்டர்ல நடிச்சாலும் நமக்கு ஒரு பெயர் கிடைக்கப் போகுதுன்னு நினைச்சு ‘ஓகே’ன்னு சொல்லிட்டேன்.

ஏன்னா.. இப்போ நான் ஹீரோவா நடிக்கலைன்னாலும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சாலும் அதுவே ஹீரோவுக்கு ஈக்குவலா வந்திரும்.  ‘தலைவா’ல.. இளைய தளபதி விஜய்கூட நடிச்சேன். நல்ல பெயர்.. இதுக்கப்புறம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ராஜா ராணி’, ‘பாகுபலி’ன்னு எதுல நடிச்சாலும் எனக்குன்னு ஒரு பெயர் கிடைச்சிருக்கு. இப்போ ஹீரோவா நடிக்கலைன்னாலும் கதையின் நாயகனா நடிக்க வேண்டி வந்தாலும், அது எனக்குப் பெருமைதான். அதுனாலதான் இந்தக் குழப்பம் வந்தது..

அப்போ என் பசங்க திவ்யாவும், சிபியும்தான் சொன்னாங்க. ‘இங்க பாருங்க.. இப்போ நீங்க எந்த கேரக்டர்ல நடிச்சாலும் அது படத்துல நல்லாயிருக்கான்னு மட்டும் பாருங்க’ன்னு சொன்னாங்க. யோசிச்சுப் பார்த்தேன். இனிமே, இந்த வயசுல போய் நாம ஹீரோவா நடிக்கவே முடியாது. ஏன்னா டூயட்டுன்னு ஒரு விஷயம் இந்திய சினிமால இருக்கு.. அமிதாப்பச்சன் மட்டும்தான் தப்பித் தவறி நடிச்சிக்கிட்டிருக்காரு. “நீங்க இந்த நேரத்துல ஏதோ புருஸ் வில்லிஸ், டென்சில் வாஷிங்கடன் மாதிரி உங்களை நினைச்சுக்கிட்டு ஆண்டனி குவினின் ‘உமர் முக்தார்’ மாதிரி கேரக்டர் எதிர்பார்க்காதீங்க”ன்னு பிள்ளைக சொன்னாங்க. ஏன்னா, அந்த சூழலே இங்க இப்போ கிடையவே கிடையாது.

‘இசை’ படத்துல நல்ல கேரக்டர். சூர்யா ஸாருக்கு ரொம்ப தேங்க்ஸு.. நல்ல கிளாப்ஸ் வாங்குற சீனையும், டயலாக்குகளையும் என் மேல வைச்சு கைதட்டல் வாங்க வைச்சிட்டாரு. ஆனாலும் அவர்தான் டூயட் பாடுறாரு. எனக்கு வயிறு எரியுதுல்ல.

Night Show Trailer Launch Stills (15)

ஏன் வயிறு எரியுதுன்னா கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாவே பொறந்து, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டிவா நடிக்கிறது ஒரு கேட்டகிரி. நான் 75 படங்கள்ல வில்லனா நடிச்சிட்டு.. அப்புறம் 125 படங்கள்ல கதாநாயகனாவே நடிச்சிருக்கேன். குஷ்பூ, பானுபிரியா, கவுதமி, மீனா, சுகன்யா இப்படி எல்லார்கூடவும் டூயட் பாடிட்டேன். என்னதான் கேரக்டர் ஆர்ட்டிஸ்ன்னுல்லாம் வேறொருத்தன் வந்து நம்ம படத்துல டூயட் பாடும்போது ‘டேய்.. டூயட்டா பாடுற’ன்னு வயிறு எரியத்தான் செய்யுது.. அது கொஞ்சம் இடிக்கும்..

இதுனாலதான் நல்ல, நல்ல வாய்ப்புகளை விட்டுட்டேன். கவுதம் மேனன்கூட ஒண்ணு சொன்னார். அதுதான்.. அந்த அரிப்புதான். இந்த ஈகோதான். ஹீரோவா நடிச்சுத் தொலைஞ்சதுதான் இப்போ பெரிய பிரச்சினை.

இதைத் தாண்டி வந்து இந்த மாதிரி ஒரு முக்கிய கேரக்டர்ல நடிக்கும்போது ஒரு ஹீரோயின் வந்து அசத்தலா நடிச்சு பேர் வாங்கிட்டுப் போயிருவாங்களேன்னு நினைச்சும் பயந்தேன். அப்போ ஹீரோயின் யாருன்னுகூட பிக்ஸ் ஆகலை. அப்புறம் அவங்க, இவங்கன்னு தேடிப் பிடிச்சு கடைசியா இந்த அனுமோல்ன்னு சொன்னாங்க. பிரமாதமா நடிச்சிருக்காங்க. அசத்தியிருக்காங்க. இவங்க ஏற்கெனவே நிறைய மலையாளப் படங்கள்ல நடிச்சு அவார்டெல்லமாம் வாங்கியிருக்காங்களாம்.. அப்படி படம் பிரமாதமா வந்திருக்கு.

நாம கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை.. இதுவரைக்கும் 200-க்கும் மேல படம் பண்ணியாச்சு. இயக்குநர்கள் இல்லாமல் நாமளும் இல்லை. அவங்க சொல்லிக் கொடுக்காமல் நாம எதையும் கத்துக்காமல் அப்படியே விட்டோம்ன்னா நாமளும் காலி. நமக்கு பின்னாடி இயக்குநர்கள் இருக்காங்க. இருந்தாங்க. ‘பாகுபலி’ல இப்பவும் ‘கட்டப்பா..’ ‘கட்டப்பா..’ன்னு சொல்றாங்கன்னா அதுக்கு பின்னாடி ராஜமெளலி இருக்காரு.

ஷூட்டிங்கப்ப என் பக்கத்துல வந்து மெதுவா சொல்வாரு.. ‘ஸார். கொஞ்சம் சீரியஸா இருங்க ஸார்.. சீரியஸ் படம் ஸார்’ன்னு சொல்லிக்கிட்டேயிருப்பார். அப்படி அவரை படுத்திட்டேன். இது நம்ம குணம். இதுக்குத்தான் நாம இயக்குநர்கள் சொல்றதை அப்படியே செஞ்சிரணும்ன்றது..!

இயக்குநர் ஆண்டனி பல பெரிய இயக்குநர்களுக்கு எடிட்டரா இருந்திருக்காரு. நல்ல அனுபவசாலி. இந்தப் படத்தோட ஷூட்டிங்கப்போ நடிப்பு சொல்லிக் கொடுத்தார். நடிச்சே காட்டினாரு. அந்த இடத்துல என்னை பார்க்க வந்த ஒரு புரொடியூஸர் ஆண்டனியை காட்டி என்கிட்ட ‘என்ன ஸார் இவர் இப்படி சொல்லிக் கொடுக்குறாரு..?’ன்னே கேட்டாரு. சொல்லிக் கொடுக்கணும். அப்பத்தான் நடிகனும் தன்னைத் திருத்திக்குவான். அப்டேட் செஞ்சுக்குவான்.. அப்டேட் செய்யாத கலைஞன் சீக்கிரம் காணாமல் போயிருவான்.

உலகத்துலேயே அருவெறுப்பான வார்த்தை என்ன தெரியுமா..? ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல..’ அப்படீன்னு சொல்றதுதான். ஒரு மனுஷனை தீவிரமா நாசமாக்குற வசனம் எதுன்னா அது இதுதான். ‘ஸார் அந்த வால்டர் வெற்றிவேல்ல’ன்னு ஆரம்பிப்பாங்க… ‘டேய்.. அது முடிஞ்சு போச்சேடா.. 20 வருஷமாச்சு.. வேற சொல்லு..’ ‘அமைதிப்படைல அந்த சேர்ல’ன்னு ஆரம்பிப்பாங்க. ‘டேய் உதை வாங்கப் போற.. அதைப் பார்த்தாச்சு. சிரிச்சாச்சு.. கை தட்டியாச்சு.. முடிஞ்சாச்சு.. இப்போ நீ என்ன சொல்ற. இப்போ சத்யராஜ் யாரு?’ன்னுன்னு கேப்பேன். அதைச் சொல்லிட்டான்னு வைச்சுக்குங்க.. நாம சினிமால தொடர்ந்து இருக்கலாம்.

Night Show Trailer Launch Stills (31)

இப்படி அவங்களை சொல்ல வைக்கிறதுக்கு நம்மளைவிட வயசுல குறைஞ்சவங்களையும், ஜூனியர்களையும் நாம அனுமதிக்கணும்.  ஆண்டனி ஸார் அப்படித்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செஞ்சிருக்கேன். அதுவே அவ்வளவு நல்லா வந்திருக்கு.

நாம கண்ணு, காது, மனசு எல்லாத்தையும் திறந்து வைச்சாத்தான் புதுசா ஏதாவது வரும்.  புதுசா கத்துக்க முடியும். ஒரு ஆறா இருந்தால்தான் சீராக ஓட முடியும். குட்டையா இருந்தால் அப்படியே தேங்கி நிற்க வேண்டிவரும். நான் குட்டையா இருக்க விரும்பவில்லை. ஆறாகவே இருக்க விரும்புகிறேன். அப்போதுதான் என் பயணம் தங்கு தடையின்றி தொடரும்னு நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஸார் ரொம்ப வருஷமா சினிமால இருக்காரு. நிறைய படங்களை தயாரிச்சிருக்காரு. நானும் அதுல நடிச்சிருக்கேன். இந்தப் படத்தில் நடிக்க வந்த மல்லிகான்னு ஒரு பொண்ணு, ‘ஸார் என்ட அம்மே ஸ்கூல்ல படிச்சப்போ நூறாவது நாள் படம் பார்த்து பிரமிச்சு’ன்னு சொல்லுச்சு. முதல்ல கேட்டவுடனே என்னது, அவங்கம்மா நான் படத்துல நடிக்கும்போது ஸ்கூல்ல படிச்சதான்னு டவுட்டாயிருச்சு. அப்புறம்தான் தெளிவா சொல்லுச்சு.

இப்படத்தின் கதாசிரியர் ஜாய் மேத்யூ ஸார் எனக்கு அதிகம் பழக்கமில்லை. அவருக்கு அதிகமா தமிழ் தெரியாததால நானும் அதிகமா பேசலை. இப்போத்தான் எனக்கு ஒண்ணு ஞாபகம் வருது. நான் ‘பூவிழி வாசலிலே’ படத்துல நடிச்சப்போ கேரளால ஷூட்டிங். அப்போ ஒரு பங்ஷனுக்கு கூப்பிட்டிருந்தாங்க. நமக்கு மலையாளமும் சரியா தெரியாது. மேடைல என்ன பேசுறதுன்னு தெரியாம எதையாவது பேசி சமாளிக்கணுமேன்னு ஒண்ண சொன்னேன்.

நான் பிஎஸ்சி கிராஜூவேட். ஆனாலும் இங்கிலீஸ் தெரியாது. என் புரொபஸர் கேட்டார். ‘ஏண்டா மடையா.. கிராஜூவேட்டா இருந்துக்கிட்டு இங்கிலீஷ் தெரியாதுன்ற?’ன்னு கேட்டார். நான் சொன்னேன். ‘ஸார் கோயம்புத்தூர்ல இருந்து பாலக்காடு 40 கிலோ மீட்டர். இருந்தும் எனக்கு மலையாளம் தெரியாது. இங்க இருந்து லண்டன் 4000 கிலோ மீட்டர். எப்படி ஸார் இங்கிலீஷ் தெரியும்?’ண்ணே..!

சரி.. எப்படியோ இந்தப் படத்தில் நடித்த்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.  இயக்குநர் விஜய் ஸார், ஆண்டனி ஸார், சூர்யா ஸார் மாதிரியான யெங் இயக்குநர்களெல்லாம் என்னை இப்போ மாதிரியே, இன்னும் 40 வருஷத்துக்கு என்னை தள்ளிட்டுப் போகணும்னு கேட்டுக்கறேன்..” என்று சொல்லி முடித்தார்.

Our Score