full screen background image

“சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிதான்” – சத்யராஜின் ஆணித்தரமான பதில்!

“சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிதான்” – சத்யராஜின் ஆணித்தரமான பதில்!

சமீப நாட்களாக அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்கிற சர்ச்சை தமிழ்த் திரையுலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ரஜினியே ‘ஜெயிலர் ‘இசை வெளியீட்டு விழாவில் காக்கா-கழுகு கதையைச் சொல்லி தனது ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள் என்று மறைமுகமாகக் கிண்டல் செய்திருந்தார்.

இந்த நிலையில் ‘அங்காரகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜிடம் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது “சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான்…” என்று நடிகர் சத்யராஜ் அடித்து சொன்னார்.

இது குறித்து அவர் மேலும் பேசும்போது, “சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார்தான் ஞாபகத்திற்கு வருகிறார்.. அதை மாற்றக் கூடாது.. என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ரஜினி சார்தான்.

தமிழ் சினிமா தோன்றியபோது முதல் ‘சூப்பர் ஹீரோ’ன்னா அது தியாகராஜ பாகவர்தான். அவருக்கு கொடுத்த பெயர் ஏழிசை மன்னர்’ என்பது. அதன் பிறகு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்., ‘நடிகர் திலகம்’ சிவாஜி என காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும், ஒவ்வொன்றுக்கும் ஒருவர்தான் சொந்தமானவர்.

இப்போது ரஜினி சாரை ‘மக்கள் திலகம்’ என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ? ‘தசாவதாரம்’ படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை ‘நடிகர் திலகம்’ என்று அழைக்க முடியுமா? ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் ரஜினிகாந்த்துதான். ‘உலக நாயகன்’ என்றால் கமல் ஸார்தான். ‘தளபதி’ என்றால் விஜய்தான். ‘தல’ என்றால் அது அஜித்துதான்..” என்றார் சத்யராஜ்.

Our Score