நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் துவங்கியது

நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் துவங்கியது

ஆர்.கே.எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.ரமேஷ்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் சந்தானத்திற்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லு சபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – மாதவன், எழுத்து, இயக்கம் – ஆர்.ஸ்ரீனிவாசன்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான ஸ்ரீனிவாசராவ். இவர், ‘வல்லினம்’ படத்தில் இயக்குநர் அறிவழகனிடம்  உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் கூறுகையில், “இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது. காமெடி கதைக் களம் என்றாலும்கூட தந்தை – மகன் இடையே நடைபெறும் காட்சிகள் ஒவ்வொரு தந்தை – மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்து வைக்கும்.

ஒரு தந்தைக்கும் – மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்து வந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப் போக முடியும்.

மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெறுமென்பதில் ஐயமில்லை.

காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில் மற்றொரு அழகிய பரிணாமத்தில் நடிக்கிறார் சந்தானம். இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பாராட்டு பெறும். மற்றும் இன்றைய அரசியல் சூழலை வெளிப்படுத்தும்வகையில் பல சுவாரஸ்யமான ,ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது.

ஹீரோயினாக ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும், படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.

கும்பகோணத்தைத் தொடர்ந்து  ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும். அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது…” என்றார்.

இந்தப் படம் இன்று காலை கும்பகோணத்தில் பூஜை நிகழ்வுடன் ஒரு கோவிலில் நடைபெற்றது.

நடிகர் சந்தானம் ‘பேரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதியப் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

Our Score