இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபனுக்கு நேற்று ஒரு சங்கடமான சூழல் இணையவெளியில் நடந்தேறியுள்ளது.
டிவிட்டரில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு தன்னைத் தொடர்பு கொள்ளும்படி தனது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு தனிப்பட்ட செய்தியாக அனுப்பியிருக்கிறார் பார்த்திபன்.
ஆனால் அந்தப் பெண்ணோ அந்தச் செய்தியை பொதுவில் போட்டுவிட.. அடுத்த ஒரு மணி நேரத்தில் பல போன் கால்கள் பார்த்திபனுக்கு பறந்திருக்கிறதாம்.. எப்படி இது என்று யோசித்துப் பார்த்ததில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று யூகித்து அந்த டிவிட்டாடிய பெண் ஐடி போலியாக இருக்கும் என்று இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் அந்தப் பெண் தான் மீடியாவைச் சேர்ந்தவள் என்றும் தாம் ஒரு ஒரு தமிழ் இணையத் தளத்தில் எழுதிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தாராம். இதனை நம்பியே பார்த்திபனும் நம்பரைக் கொடுத்து ஏமாந்திருக்கிறார்..
இது பற்றி நேற்று தனது முகநூல் பக்கத்தில் பார்த்திபன் எழுதியிருக்கிறார்.
twitter, fb இரண்டிலும், தோன்றுவதை பதிவு செய்து கொள்வதை தவிர, பிற அறியா பிரபலம் நான். உதாரணத்திற்கு ‘add friend’ என்றால் அது friend req என தவறாக நினைத்து add செய்து பின் sorry கேட்டு, வெட்கக்கேடான சில உண்டு பல நேரங்களில்… நான் எதையுமே தமிழில் எழுதி தகுதி படைத்தவன். ஆதலால் ஆங்கிலம் அநேகமாய் தகராறே.
தொடர்ந்து msg அனுப்ப இயலாதபோது என் எண்னை கொடுத்து என்னை அழைக்க சொல்வேன், அவர்களுக்கு விருப்பம் இருப்பின். வித்தியாசமான விமர்சகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகை சம்மந்தப்பட்டவர்களோடு இப்படி பல முறை பேசி இருக்கிறேன்.
அப்படித்தான் _ _ _ _ _ _ என்ற பெயர் கொண்ட நபரை பத்திரிக்கையாளர் என நினைத்து என் எண்னை அளித்து பேச சொன்னேன். அதை dm ஆகத்தான் அனுப்ப முடியும். அதில் எந்த தவறும் இல்லை. எதற்காக அதை tweet செய்தலும் delete செய்தலும் என புரியவில்லை.
திரு வெற்றிமாறன் அவர்களோடு ஒரு சந்திப்பில் இருந்த எனக்கு தொடர்ந்து என் contact list-டில் இல்லாத நபர்களிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள். என் வேலையை அது பாதித்தது. அது யாரோ செய்த செய்வினை என்பது பின்பே எனக்கு தெரிந்தது. அதற்குள் ஏகப்பட்ட வாதங்கள். support செய்தவர்களுக்கு நன்றி. நீண்ட நாட்களுக்கு பின் என்னை எழுத தூண்டிய நண்பர் _ _ _ _ _ அவர்களுக்கும் நன்றி!!!
பளபள சட்டையில் வெட்டி பந்தா பண்ணும் வடிவேலுகளை நிஜ வாழ்க்கையில் வேண்டுமானால் ராகிங் செய்யலாம்.. ஆனால் இணையவெளியில் முகமூடியுடன் அலையும் வடிவேலுக்களிடம் மாட்டினால் இதுதான் நடக்கும்..!