full screen background image

நடிகர் சங்கம் முன்பு ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை – போலீஸ் கமிஷனரிடம் நடிகர் நாசர் புகார்

நடிகர் சங்கம் முன்பு ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை – போலீஸ் கமிஷனரிடம் நடிகர் நாசர் புகார்

நேற்று முன்தினம் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தி்ன் முன்பு சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சில உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான திரு.நாசர், சக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் இன்றைக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடத்தில் நேரில் வந்து புகார் மனுவை அளித்தார்.

அந்த மனுவின் விபரங்கள் இங்கே :

FIRST COMPLAINT LETTER

பெறுநர் :

உயர்திரு. காவல் ஆணையாளர் அவர்கள்,

சென்னை மாநகர காவல்துறை,

வேப்பேரி,

சென்னை.

அன்புடையீர்,

வணக்கம்,

27.08.2016 காலை 11.30 மணியளவில் சங்க உறுப்பினர் திரு.வாராகி அவர்கள்  சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

சங்க செயற்குழு உறுப்பினரும், டிரஸ்டியுமான திரு.பூச்சி முருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் திரு.பிரேம்குமார்  அவர்கள், திரு.ஸ்ரீமன் அவர்கள் திரு.உதயா அவர்கள் மற்றும்  சங்க சட்ட ஆலோசகர் திரு.கிருஷ்ணாரவீந்திரன் அவர்கள், திரு.வாராகி அவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ள காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், திரு.வாராகி அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் யாரும் இல்லாதபட்சத்தில் நான் பேச விரும்பவில்லை என்று கூறி சென்று விட்டார். ஆனால், சங்கத்தின் நுழைவாயில் எதிரே அனைத்து முன்னேற்பாட்டோடு ஊடகங்களை வரவழைத்து பேட்டி கொடுத்தார்.

இது அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாமென்றும், நுழைவாயில் எதிரே கூட்டம் கூட வேண்டாம் என்றும் அலுவலக ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு திரு.வாராகி (9940444476) மறுத்துவிட்டு, அவருடன் அலுவலகத்திற்கு வெளியே ரவுடிகளை வரவழைத்து கூட்டம் சேர்த்து கொண்டு நிர்வாகத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கோஷம் போட்டு கொண்டு அலுவலக ஊழியர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசினார்.

அலுவலக ஊழியர்கள் சத்தம் போட வேண்டாம் என்று கூறியதற்கு, என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதென்றும், தான் மிகவும் மோசமானவன் என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

மேலும், சங்கத்திற்கு என்று சட்ட விதிகள் உள்ளது. சங்கத்தினுடைய மரபு பாரம்பரியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தி சுயவிளம்பரத்திற்காக சங்கத்தின் கொள்கைகளை கேவலமாக்கிவிட்டார்.

எனவே, அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும், இச்சம்பவத்தால் பயந்து மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கும் இரு பெண் ஊழியர்கள் உட்பட மற்ற ஊழியர்களுக்கும், சங்க அலுவலகத்திற்கும் பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

தங்கள் அன்புள்ள

M.நாசர்

(தலைவர்)

SECOND COMPLAINT LETTER

பெறுநர் :

உயர்திரு. காவல் ஆணையாளர் அவர்கள்,

சென்னை மாநகர காவல்துறை,

வேப்பேரி,

சென்னை.

அன்புடையீர்,

வணக்கம்.

27.08.2016 காலை 11.30 மணியளவில் சங்க உறுப்பினர் திரு.வாராகி அவர்கள் சில சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

சங்க செயற்குழு உறுப்பினரும், டிரஸ்டியுமான திரு.பூச்சி முருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் திரு.பிரேம்குமார்  அவர்கள், திரு.ஸ்ரீமன் அவர்கள், திரு.உதயா அவர்கள் மற்றும்  சங்க சட்ட ஆலோசகர் திரு.கிருஷ்ணாரவீந்திரன் அவர்கள், திரு.வாராகி அவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ள காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், திரு.வாராகி அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் யாரும் இல்லாதபட்சத்தில் நான் பேச விரும்பவில்லை என்று கூறி சென்று விட்டார்.

ஆனால், சங்கத்தின் நுழைவாயில் எதிரே அனைத்து முன்னேற்பாட்டோடு ஊடகங்களை வரவழைத்து பேட்டி கொடுத்து குழப்பம் விளைவித்து கொண்டிருக்கும்போதே, திரு.சங்கையா(7871365736) (தற்காலிகமாக ARO பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்) அவர்கள் ஒரு கூட்டத்தோடு வந்து அலுவலக ஊழியர்கள் அனைவரையும் வழக்கம்போல் அருவருக்கதக்க வார்த்தைகளால் பேசினார்,

சமாதானப்படுத்த சென்ற அலுவலக ஊழியர் ஒருவரின் கைபேசியை பிடுங்கி வீசிவிட்டார். மேலும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டலும் விடுத்தார். இது போன்ற சூழ்நிலையை அவர் அடிக்கடி நிகழ்த்தியுள்ளார்.ஆகவே, சங்க ஊழியர்கள் தங்கள் பணிகளை தொடர்வதற்கு அச்சப்பட்டு உள்ளனர்.

கீழ்க்கண்ட நபர்களால் அலுவலக ஊழியர்களுக்கு ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள் என அச்சம் உள்ளது. எனவே, திரு.சங்கையா மற்றும் அவர் அழைத்து வந்த கோஷ்டிகளான S.A.ராஜீ, M.உஷா, கோவை லட்சுமி, V.அகிலா, J.B.ராணி, R.தேவி, V.ஜெயந்தி, M.சோலைமணி, A.வீரமணி, V.முரளி, P.சந்தியா, K.S.ரஜினி, R.தேவேந்திரன், S.மலர்கொடி, K.பொன்னுசாமி ஆகியோர்கள் மீது விசாரணை செய்து அலுவலக ஊழியர்களுக்கும், சங்கத்துக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இது குறித்து 27.08.2016 மதியம் சுமார் 12.30 மணியளவில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சங்க மேலாளர் புகார் கொடுத்துள்ளார் என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

 நன்றி

தங்கள் அன்புள்ள

M.நாசர்

(தலைவர்)

Our Score