பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற பட நிறுவனம் சார்பில் T..சரவணன் தயாரித்திருக்கும் படம் ‘அதிபர்’.
இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள்.
மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவை சரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலி முருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதி கண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிலிப்ஸ் விஜயகுமார். இசை – விக்ரம்சிங்கா, பாடல்கள் -நா.முத்துக்குமார், விவேகா, கலை: – M.G.சேகர், நடனம் – சிவசங்கர், தினேஷ், ஸ்டண்ட் – கனல்கண்ணன், எடிட்டிங் – சஷிகுமார், தயாரிப்பு நிர்வாகம் – அஷ்ரப் – ஹக்கீம், இணை தயாரிப்பு – P.B. சரவணன், தயாரிப்பு – T.சிவகுமார். எழுத்து – இயக்கம் – சூர்யபிரகாஷ். (இவர் ஏற்கெனவே ‘மாயி’, ‘திவான்’, ‘மாணிக்கம்’, போன்ற படங்களை இயக்கியவர்.
இந்தப் படத்தில் நடிகர் நந்தா டேவிட் என்ற ரெளடியாக, வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறாராம். நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரமாம்.
அடிதடியையே கொள்கையாக கொண்டிருக்கும் டேவிட் நட்புக்காக நல்லவனாக மாறி வாழும்விதமாக இதில் நடித்திருக்கிறார். இது தனக்குக் கிடைத்திருக்கும் சவாலான வேடம் என்கிறார் நந்தா. படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.