full screen background image

“விஜய் எங்கள் வீட்டில் ஒருவர்…” – நடிகர் நாசரின் நன்றி நவிலல்..!

“விஜய் எங்கள் வீட்டில் ஒருவர்…” – நடிகர் நாசரின் நன்றி நவிலல்..!

“நடிகர் விஜய் எங்கள் வீட்டில் ஒருவர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் நடிகர் நாசர். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் விஜய் பற்றி சொல்லும்போது இதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.

“எனது மூத்த மகனான நூரூல் ஹசன் பாசில் தீவிரமான விஜய் ரசிகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி கடுமையான போராட்டத்திற்குப் பின்பு உயிர் பிழைத்தார். ஆனாலும் அந்த விபத்தினால் என் மகன் தனது ஞாபக சக்தி முழுவதையும் இழந்தார். என் மகனுக்கு ஞாபகத்தில் இருக்கும் ஒரே பெயர் விஜய் என்பதுதான். ஆரம்பத்தில் நாங்களும் அவருடைய நண்பர் பெயரைதான் விஜய், விஜய் என சொல்கிறார் என்று நினைத்தோம்.

ஆனால், அதன் பின்புதான் தெரிந்தது அது நடிகர் விஜய் என்று..! நூரூல் இன்றுவரையிலும் விஜய்யின் பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்போதும் அவரது அறைக்குச் சென்றால் விஜய் பாட்டுதான் ஓடி கொண்டிருக்கும்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட விஜய் என் மகனின் பிறந்தநாள் அன்று என் வீட்டிற்கு வந்து என் மகனுடன் நீண்ட நேரம் இருந்து அவனுடன் பேசி, அவனை சந்தோஷமாக்கிவிட்டு சென்றார். அன்றிலிருந்து விஜய்யும் எங்களது வீட்டில் ஒருவராக இருக்கிறார்..” என்று அந்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் நடிகர் நாசர்.

 
Our Score