full screen background image

‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

தயாரிப்பாளர்கள் கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா நிறுவனத்தின் ஜெயஸ்ரீ விஜய்யின் கூட்டுத் தயாரிப்பில், இயக்குநர் விஜய்ஸ்ரீயின் இயக்கத்தில் உருவாகும் ‘வெள்ளி விழா’ நாயகன் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இயக்குநர் விஜய்ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்.பி.மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில் நுட்பக் கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி படம் பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்து கொண்டார்.  சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை குழுவினர் தொடர இருக்கிறார்கள்.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கருவாகும்.

Our Score