பிரபல தமிழ் நடிகரான கருணாகரனும் தொலைக்காட்சி பக்கம் வந்துவிட்டார்.
புதிதாகத் துவக்கப்பட்டிருக்கும் டிஸ்கவரி சேனலின் ஒரு அங்கமான ‘டி தமிழ்’ சேனலில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை நடிகர் கருணாகரன் தொகுத்து வழங்க இருக்கிறார்.
‘டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்’ ‘டிஸ்கவரி நெட்வொர்க்’கின் பல்வேறு சேனல்களான ‘டிஸ்கவரி’, ‘அனிமல் ப்ளானெட்’, ‘டி.எல்.சி’, ‘டிஸ்கவரி கிட்ஸ்’, ‘டிஸ்கவரி சயின்ஸ்’, ‘டிஸ்கவரி டர்போ’ மற்றும் ‘ஸ்கிரிப்ஸ் நெட்வொர்க் இன்டராக்டிவ்’ ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் பார்த்து ரசிக்கக் கூடிய சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை புதிதாதக் தான் உருவாக்கியிருக்கும் பொழுதுபோக்கு சேனலான ‘டி-தமிழ்’ சேனலில் வழங்கவுள்ளது.
இதனால், அதிகத் தரமான புனைவு மற்றும் கதை அல்லாத நிகழ்ச்சிகளை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி போன்ற 8 மொழிகளில் வழங்குவதன் மூலமாக இந்தியாவின் பொழுது போக்கு சேனல் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ‘டிஸ்கவரி சேனலை’க் காட்டிலும் ஒரு மாறுபட்ட தோற்றம் மற்றும் உணர்வினைப் பெற்றதாக இந்தப் புதிய ‘டி-தமிழ்’ சேனல் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியை விரும்பும் நேயர்களை மாநிலம் முழுவதும் இருந்து ஈர்க்கும் ஒரு புதுமையான முயற்சியாக, டி-தமிழ் சேனல் நவம்பர் 16 அன்று மதியம் 1 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் ‘அசால்டா அலர விடும் புள்ளிங்கோ’ நிகழ்ச்சிக்கு புகழ் பெற்ற தமிழ் நடிகரான கருணாகரனை தொகுப்பாளராக ஆக்கியுள்ளது.
‘டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ்’ ஒரு சக்திமிக்க GEC உடன் கூடிய அதிகபட்ச பிராந்திய நேயர்களைக் கொண்ட ஒரு சந்தையான தமிழ் நாட்டின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு இந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் ‘டிஸ்கவரி’ இந்தியா மேற்கொண்ட நுகர்வோர் குறித்த விரிவான ஆய்வு நுகர்வோரைப் பற்றியும் இடைவெளிகளைப் பற்றியும் புரிந்து கொள்ள உதவியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து பெற்ற கற்றல், தகவல் மற்றும் பொழுது போக்கு நெட்வொர்க்கின் தேவை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது – இவற்றை ‘டிஸ்கவரி சேனலைத்’ தவிர வேறு யாராலும் வழங்கிவிட முடியாது.
இந்த கற்றல்களை சேனல் செயல்படுத்த துவங்கியுள்ளது. அதன் பலனாக கடந்த நான்கு வாரங்களில் எந்தவிதமான சந்தைப்படுத்துதல் செலவுமின்றி இதன் நேயர்களின் எண்ணிக்கை 51% அதிகரித்துள்ளது.
“டி தமிழ்’ சேனல் தற்போது பெற்று வரும் இந்த புதிய மாற்றம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இது ஒரு சுவாரஸ்யமான உக்தியாகும் – இது எங்களது பலம் வாய்ந்த அம்சங்களை ஒன்று திரட்டுவதுடன் ‘டி-தமிழ்’ சேனலை நீண்ட காலத்திற்கு சிறப்பாக வளரச் செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது” என்கிறார் டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் இந்தியாவின் – உள்ளடக்கம், உண்மை மற்றும் வாழ்க்கை முறை பொழுது போக்கிற்கான தெற்காசிய இயக்குநர் சாய் அபிஷேக்.
தொடர்ந்து கருணாகரன் வழங்கும் நிகழ்ச்சி பற்றிப் பேசிய சாய் அபிஷேக், “தமிழ் நேயர்களுக்காக இத்தகைய ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியது இதுவே முதன்முறையாகும். ஏதாவது நகைச்சுவைமிக்க, ஆனால் தோல்வியில் முடிந்த வீடியோக்களை வழங்குவதில் ‘ஃபெயில் ஆர்மி’தான் உலகின் முன்னணி அமைப்பாகும்.
மேலும், இந்த வீடியோக்களை தனக்கே உரிய நகைச்சுவையான பாணியில் வழங்குவதன் மூலமாக இந்த நிகழ்ச்சி முழுவதையும் மனதிற்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக்குகிறார். இந்தப் புதியத் தொடரை தமிழ் நேயர்கள் தங்களது மனதிற்கு பிடித்த நிகழ்ச்சியாக்குவார்கள் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
முதன்முறையாக டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து பேசிய நடிகர் கருணாகரன், “நான் டிவியில் நடிப்பது குறித்து முன்பு ஒரு போதும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் இரண்டு காரணங்களுக்காக என்னால் இந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை.
முதலாவது… எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் நான் மற்றவர்களிடம் பார்க்கும்படி கூறும் டிஸ்கவரி சேனலிடமிருந்து எனக்கு வந்த வாய்ப்பு. இரண்டாவது ‘ஃபெயில் ஆர்மி’ என்கின்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
தோல்வி ஏற்படும்போது அதனைப் பார்த்து சிரிப்பது என்பது ஒரு அரிதான குணமாகும். இது மகிழ்ச்சி நிறைந்தது. அதே நேரம் ‘எதையும் கஷ்டமாக எடுத்துக் கொள்ளக் கூடாது’ என்கின்ற ஒரு முக்கியமான செய்தியும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக வழங்கப்படுகிறது. என்ன ஒரு அற்புதமான கூட்டணி..!”என்றுதெரிவித்தார்.
டி-தமிழ் சேனலை உண்மையிலேயே மாறுபட்ட பிராண்டாக உருவாக்குவதற்காக நகைச்சுவை, குற்றம், ப்ரைம் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே வழங்குதல் போன்றவை மூலமாக குடும்பத்தினருக்கு ஏற்ற வடிவில் வழங்கி அதன் மூலமாக பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இது செயல்பட்டு வருகிறது.
இரவு 9 மணி ப்ரைம் டைம் நேரத்தில் புதுமையான உணவினை அடிப்படையாகக் கொண்ட ‘கட்த் ரோட் கிச்சன்’ போன்ற ‘டென்ட் போல் எண்டர்டெயின்மெண்டின்’ நிகழ்ச்சி இருக்கும், அதனைத் தொடர்ந்து ‘பாரா நார்மல் விட்னஸ்’ மற்றும் ‘ஏ ஹண்டிங்’ போன்ற அமானுஷ்யத்தை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.
மாலை 6 மணிக்கு புனையமில்லாத உலக அளவில் புகழ் பெற்ற ‘டாட்லர்ஸ் அண்டு டியாராஸ்’ போன்ற நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் காலை நேரங்களிலும் மேலும் 5 மணி போன்ற மாலை நேரங்களிலும் ‘லிட்டில் சிங்கம்’, ‘விலங்குகள் எப்படி இதைச் செய்கின்றன?’ மற்றும் ‘கட்டவிழ்த்து விடப்பட்ட விலங்குகள்’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
டிஸ்கவரி தமிழ்நாட்டிற்கான விளம்பர விற்பனை பங்காளராக ஃபோர்த் டைமென்ஷன் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது. இத்துறையில் வல்லுனராக விளங்கும் ஷங்கர்.பி அவர்களின் தலைமையில் செயல்படும் ஃபோர்த் டைமென்ஷன் மீடியா இந்த பகுதியில் உள்ள முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் ரேடியோ நிலையங்களுக்கு விளம்பரங்களை விற்பனை செய்து வருகிறது.
டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் இந்தியா பற்றி :
‘டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் இந்தியா’, ‘டிஸ்கவரி சேனல்’, ‘டிஸ்கவர் ஹெச்.டி.’, ‘அனிமல் ப்ளானெட்’, ‘அனிமல் ப்ளானெட் ஹெச்.டி.,’ ‘டி.எல்.சி.,’ ‘டி.எல்.சி. ஹெச்.டி.,’ ‘ஜீ த் ப்ரைம்’, ‘ஜீ த் ப்ரைம் ஹெச்.டி.’, ‘டிஸ்கவரி சயின்ஸ்’, ‘டிஸ்கவரி டர்போ’, ‘டிஸ்கவரி கிட்ஸ்’, ‘டி-தமிழ்’ மற்றும் ஒரு பிரீமியம் விளையாட்டு சேனலான ‘டி-ஸ்போர்ட்’ ஆகியவற்றை உள்ளடக்கிய 13 சேனல்களைக் கொண்ட தனது தொகுப்பின் மூலமாக பார்வையாளர்களின் திருப்தியைப் பூர்த்தி செய்யவும், பார்வையாளர்களை அதிக – தரமான நிகழ்ச்சிகள் மூலமாக ஈர்த்து அதில் ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகின்ற ஒரு முன்னணி தகவல் பொழுது போக்கு நிறுவனமாகும்.
உயிர் வாழுதல் முதல் இயற்கை வரலாறுவரை, அறிவியல் அற்புதங்கள் முதல் மிகவும் கடினமான பணிகள்வரை, மோட்டார் வாகனப் பயணம் முதல் வாழ்க்கை முறைகள், மற்றும் சமீபத்திய பொறியியல் அற்புதங்கள் போன்ற அசல் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது முதல் விளையாட்டு நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்புவரை, ஒவ்வொரு சேனலும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை நிகழ்ச்சியில் ஈடுபாட்டுடன் வைத்திருக்கக் கூடிய பல்வேறு பிரத்யேகமான அவசியம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
மேலும் தகவல்களுக்கு, தயவு செய்து http://corporate.discovery.com இணையத்தைப் பார்க்கவும்.