2 நாளில் சமாதானத்திற்கு வரவில்லையெனில் வழக்குதான் – நடிகர் கார்த்திக் எச்சரிக்கை..!

2 நாளில் சமாதானத்திற்கு வரவில்லையெனில் வழக்குதான் – நடிகர் கார்த்திக் எச்சரிக்கை..!

நடிகர் கார்த்திக்கின் சொத்துப் பிரச்சினை தெருவிற்கு வந்த பின்பு தினமும் ஒரு நியூஸ் அவரைப் பற்றி வந்து கொண்டேயிருக்கிறது.

கார்த்திக்கின் தாயாரே கார்த்திக் பற்றி போலீஸில் புகார் கொடுத்ததையடுத்து, நேற்று மதியம் கார்த்திக் பத்திரிகை நிருபர்களை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார்.

அப்போது, “போயஸ் கார்டனில் இருக்கும் வீடு தொடர்பாக எனக்கும், என் சகோதரர் கணேசனுக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது. அந்த இடத்தில் அப்பார்ட்மென்ட்ஸ்போல் கட்டி, இருவரும் வசிக்கலாம் என நான் கூறினேன். ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். தொடர்ந்து பிரச்னையை முடிக்கவும் அவர் தயாராக இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன். மற்றபடி, நான் வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில்தான் இப்போதுவரையில் இருந்து வருகிறேன்…” என்றார் கார்த்திக்.

பேட்டியின்போது கார்த்திக்கின் இரண்டு அக்காள்களின் கணவர்களும், மூத்த அக்காளின் மகனும் உடனிருந்தனர்.

Our Score