full screen background image

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று-மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று-மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகருக்குச் சென்று வந்திருந்தார். சிகாகோவில் நமது கதர் ஆடைகளை விற்பனை செய்யும் அங்காடியைத் திறந்து வைக்கவே கமல் அங்கே சென்றிருந்தார்.

இந்தியா திரும்பியவுடனேயே கடந்த சனிக்கிழமையன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாராந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து நேற்று அவருக்கு இருமல் அதிகரித்ததால் உடனடியாக கொரோனா டெஸ்ட் எடு்க்கப்பட்டது. அதில் பாஸிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததால் உடனடியாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது குறித்து அவர் இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் கொரோனாவை வென்று வீடு திரும்ப வாழ்த்துகிறோம்..!

Our Score