வேகமாக வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் இர்ஃபான் அடுத்து நடிக்கும் ‘ஆகம்’ படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் இர்ஃபான். ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், ரவிராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்சிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை ஜோ ஸ்டார் எண்ட்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக கல்வியாளர் கோடீஸ்வரராஜா தயாரிக்கிறார்.
ஜினேஷ் வசனம் எழுத, சதீஸ்குமார் கலையமைப்பு செய்ய, மனோஜ் கியான் படத் தொகுப்பு செய்ய இசையமைக்கிறார் விஷால் சந்திரசேகர்.
இந்தப் படத்தின் கதையை பல நாட்கள் ஆராய்ந்து எழுதி, படத்தின் திரைக்கதைக்கு வேண்டி சிறு சிறு நுட்பங்களை அறிந்து V.விஜய் ஆனாந்த் ஸ்ரீராம் என்ற புதிய இயக்குநர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
இந்த ‘ஆகம்’ படம் இன்று காலை பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. “ஆகம்’ என்றால் ‘வருகை’ என்று அர்த்தம். மனிதத்தையும், தொழில் நுட்ப வளர்ச்சியினையும் ஒருங்கிணைத்து தலைசிறந்த தொழில் நுட்ப கலைஞர்களைக் கொண்டு நல்ல சினிமா உருவாக்குவதை கருத்தில் கொண்டு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளோம்” என்கிறார் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜா.