நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஆடியிருக்கும் முதல் குத்து டான்ஸ்..!

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஆடியிருக்கும் முதல் குத்து டான்ஸ்..!

பார்ப்பதற்கு ஐ.ஏ.ஏஸ். அதிகாரி போன்ற தோற்றத்திலும், அடுத்தாத்து அம்பி போன்ற பார்வையிலும், இன்றைய இளம் பெண்கள் மட்டுமில்லாமல் முதிர் கன்னிகளைக்கூட கவர்ந்திழுக்கும் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.

அதிகமாக படங்களில் இல்லாமல், பேசப்படும் படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், தற்போது முதல்முறையாக ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

KUTTHU_PAATU_15

‘அச்சாரம்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘உன்னை விட மாட்டேன்’ என்ற பாடலுக்கு படு ஸ்பீடான நடன அசைவுகளும் கணேஷ் ஆடியிருக்கும் ஆட்டம் அவரையே அசத்தியிருக்கிறது.

இது பற்றி பேசிய கணேஷ் வெங்கட்ராம், “குத்துப் பாடலில் ஸ்பெஷலிஸ்ட்டான இசையமைப்பாளரான காந்த் தேவாவின் இசையமைப்பில் ராபர்ட் மாஸ்டரின் நடன இயகத்தில் இந்தப் பாடலுக்கு நடனமாடியது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது.

இதுவரையில் காதல் காட்சிகளில் மட்டுமே அப்படி, இப்படி ஆடியிருக்கிறேன். இதில்தான் வேகமான இசையுடன் கூடிய நடனத்தை ஆடியிருக்கிறேன். எனக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது…” என்றார்.

தொடர்ச்சியாக மூன்று நாள் இரவுகளில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலில் கணேஷ் வெங்கட்ராமுடன் பூனம் கவுர் இணைந்து ஆடியுள்ளார்.

‘அச்சாரம்’ திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் டைப் படம். இயக்குநர் ராதாமோகனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய மோகன் கிருஷ்ணா என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கணேஷ் வெங்கட்ராம் முதன்முறையாக பக்கா லோக்கல் பையனாகவும், அல்ட்ரா மாடர்ன் பையனாகவும் நடித்திருக்கிறாராம். மேலும் இந்தப் படத்தில் ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா, கணேஷ் வெங்கட்ராமின் அம்மாவாக நடித்திருக்கிறார்.

இந்த மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

Our Score