full screen background image

“இயக்குநர் பாலா படத்தில் நடிப்பதுதான் வாழ்நாள் லட்சியம்..” – சொல்கிறார் புதுமுக நடிகர் கணேஷ் பிரசாத்..

“இயக்குநர் பாலா படத்தில் நடிப்பதுதான் வாழ்நாள் லட்சியம்..” – சொல்கிறார் புதுமுக நடிகர் கணேஷ் பிரசாத்..

சினிமா. இது கனவுகளின் தொழிற்சாலை. சிலருக்கு கனவாய் இருக்கும் தொழிற்சாலை. இங்கு உழைப்புக்கும், முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைக்கும். இதற்கு பலரை உதாரணம் கூறலாம். பொறியியல் படிப்பு, ஐ.டி. கம்பனி வேலை… இவையனைத்தையும் துறந்து தன் கனவை தேடி சென்னை வந்து இன்று ஒரு நடிகராக உருவாகியுள்ளார் கணேஷ் பிரசாத். ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’, ‘கரையோரம்’, ‘தற்காப்பு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

“கோயம்புத்தூர்ல என்ஜினியரிங் முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பெனியில் பணியாற்றி வந்தேன். எனக்கு அங்கு வேலை செய்வது நெருடலாய் இருந்தது. சின்ன வயசுல இருந்து நான் அஜித் சார் ரசிகன், எனக்கு அவர மாதிரி நடிகன் ஆகனும்தான் ஆசை. சென்னைக்கு கிளம்பிட்டேன். இங்க பல இடங்களுக்கு வாய்ப்புகள் தேடி சென்றேன். பின்னர் ஸ்டுடியோ 9 நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து கொண்டே வாய்ப்புகளை தேடினேன்..“ என்று கூறினார் கணேஷ் பிரசாத்.

“இப்போ ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக  நடிச்சிருக்கேன். இந்த படம் ஒரு காமெடி கலாட்டா. பவர்ஸ்டார், சாம் அன்டர்சன், ஜான் விஜய், சுப்பு, மனோபாலா அண்ணன் இப்படி ஒரு பெரிய சிரிப்பு பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. படத்தின் முதற்கட்ட படபிடிப்பு கொடைக்கானலில் முடிவடைந்துள்ளது, பாண்டிச்சேரி, சென்னை போன்ற இடங்களில் மீண்டும் படப்பிடிப்பை தொடர உள்ளோம்.

மேலும், “கரையோரம்’ படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒரு நாயகனாக வருகிறேன். ‘வாகை சூட வா’ இனியா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். ஷக்தி நாயகனாக நடிக்கும் ’தற்காப்பு’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன்.

எனக்கு புத்தகம் படிப்பது, ‘பாடி-பில்டிங்’கில் ஆர்வம் அதிகம் தினமும் ஓட்டம், உடற்பயிற்சி என கண்டிப்பாக நேரம் செலுத்திடுவேன். சவாலான, எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும். அதேபோல, இயக்குனர் பாலா சார் படத்தில் நடிப்பதுதான் எனது மிகப் பெரிய லட்சியம்…” எனது தனது கனவுகளை வெல்லும் வேகத்தில் சொல்கிறார் நடிகர் கணேஷ் பிரசாத்.

Our Score