full screen background image

‘பென்சிலு’க்காக கையில் பென்சிலுடன் காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்..!

‘பென்சிலு’க்காக கையில் பென்சிலுடன் காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்..!

மிகுந்த உற்சாகமாக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். டார்லிங் படம் ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘காக்கிசட்டை’ ஆகிய படங்களின் ஓட்டத்துக்கிடையிலும் இப்போதும் ஓடிக் கொண்டிருப்பதுதான் இந்தச் சந்தோஷத்துக்குக் காரணம்..!

“ஒரு கிராஃப் மேல போய்ட்டே இருந்தால்தான் அழகு. அது போல நம்ம வளர்சிக்கேற்ப நம்ம உழைப்பும் வளர்ந்தால்தான் நல்லா இருக்கும்..” ஒரு பென்சிலை கையில் சுழற்றியபடியே பேசுகிறார் இசையமைப்பாளர் / நடிகர் G.V.பிரகாஷ் குமார்.

தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ G.V.பிரகாஷ், தனது அடுத்த ரிலீஸான ‘பென்சில்’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.

“டார்லிங் படத்தில் நடிக்கத் துவங்கியபோது நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களைவிட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது.

தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளிவர தயாராக உள்ளது.

தற்பொழுது cameo  films சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது.

இயக்குனர் ஆதிக் எதை எப்போ செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதாபாத்திரம் அனைவரையும் கவரும்.

இப்படம் அதன் கதைக்காகவும், அதன் கதாபாத்திரங்களுக்காகவும் நிச்சயம் பெரிதாகப் பேசப்படும். இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளமே மிகவும் உற்சாகமானது. அந்த  உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும். விரைவில் இசையுடன் ‘கம்மிங் ஒன தி வே டூ  செல்லக் குட்டீஸ்” என்று தனது மென்மையான சிரிப்புடன் விடைபெற்றார்.

Our Score