full screen background image

ரசிகர்களுக்கு தனது கண்ணீரை காணிக்கையாக்கிய தனுஷ்..!

ரசிகர்களுக்கு தனது கண்ணீரை காணிக்கையாக்கிய தனுஷ்..!

மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ்..!

அவருடைய படங்களில் இதுவரை எந்தப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு பிரமாண்டமான ஓப்பனிங் நேற்று வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துக்குக் கிடைத்திருப்பது திரையுலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

‘ஆடுகளம்’ படத்திற்குப் பின்பு வெளியான ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வேங்கை’, ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’, ‘நையாண்டி’ என 8 தோல்வி படங்களை வரிசையாக கொடுத்திருந்தாலும், இன்னமும் கோடம்பாக்கத்தில் முன்னணி ஹீரோவாக தனுஷ் நிலைத்து நிற்பதே அவரது ரசிகர்களின் பலத்தால்தான்..

முதல் ஷோவிலேயே வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதால் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறது அந்த படத்தின் டீம்.

8 படங்களுக்கு பின்பு கிடைத்த முதல் வெற்றி என்பதால் தனுஷ அன்றிரவே தனது நண்பர்களை அழைத்து வெற்றி விழாவை கொண்டாடிவிட்டார் தனுஷ்.. இதில் சிம்புவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush-vip-party

இன்று டிவீட்டரில் தனது ரசிகர்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

“I don’t know how 2 thank my fans 4 givin VIP d biggest opening of my career n makin it a huge blockbuster. i dedicate my tears of joy 2 u all.”

எத்தனையோ பொறியியல் பட்டதாரிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வண்ணம் மிக எளிமையாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும், சுவையான வசனங்களும், கூடுதலாக தனுஷின் சிறப்பான நடிப்பும் சேர்ந்து கொள்ள.. படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுத்துவிட்டது..

தனது முதல் படத்திலேயே சூப்பர் ஹிட்டடித்துள்ள ஒளிப்பதிவாளர்-இயக்குநர் வேல்ராஜுக்கு நமது வாழ்த்துகள்..!

Our Score