“கொடி’ படத்தில் நிறைய அரசியல் பேசியிருக்கேன்” – நடிகர் தனுஷ் பெருமிதம்..!

“கொடி’ படத்தில் நிறைய அரசியல் பேசியிருக்கேன்” – நடிகர் தனுஷ் பெருமிதம்..!

தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் ‘கொடி’ படத்தின் டிரெயிலர் இன்று வெளியிடப்பட்டது.

டிரெயிலரை பார்த்தபோது அது முழுக்க, முழுக்க அரசியல் பேசும்படமாக இருக்கிறது என்பது தெரிந்தது. இதில் நாயகன் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு தனுஷுக்கு த்ரிஷாவும், இன்னொரு தனுஷுக்கு அனுபமா பரமேஸ்வரனும் ஜோடியாக நடித்துள்ளனர்.

kodi-audio-launch-photos-11

இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நாயகன் தனுஷ் பேசும்போது, “இந்தப் படம்தான் நான் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தின் கதையை இயக்குநர் துரை செந்தில்குமார் என்னிடம் கூறும்போதே, கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்தேன். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.

இதுவரை நான் நடித்த ‘புதுப்பேட்டை’ போன்ற திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இப்படம் முழுக்க, முழுக்க அரசியலை பற்றி பேசும் படம்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு மிக சிறந்த இசையை கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி. நான் ‘குக்கூ’ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை கவனித்து வருகிறேன். இந்தப் படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் கடந்த 8 வருடங்களாக ஒன்றாகப் பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியாமான திரைப்படமாக இருக்கும்…” என்று கூறினார்.

Our Score