full screen background image

ஐஸ்வர்யாவை ‘தோழி’ என்றழைத்து வாழ்த்திய நடிகர் தனுஷ்..!

ஐஸ்வர்யாவை ‘தோழி’ என்றழைத்து வாழ்த்திய நடிகர் தனுஷ்..!

‘பயணி’ என்ற பெயரில் மியூசிக் வீடியோவை தயாரித்து, இயக்கி வெளியிட்டுள்ள தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷூக்கு, நடிகர் தனுஷ் டிவீட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும், அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

அந்த நேரத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் பயணி என்ற பெயரில் மியூசிக் வீடியோ ஒன்றை தயாரித்து இயக்கி வந்தார். இந்த இசை ஆல்பத்தின் வேலைகளுக்கு ஹைதராபாத்தில் ஐஸ்வர்யா தங்கியிருந்தபோதுதான் தனுஷூக்கும், அவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டு அது விவகாரத்து அறிவிப்பில் வந்து நின்றிருந்தது.

இந்நிலையில் இன்று அந்த பயணி’ என்ற மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்பை ஐஸ்வர்யாவின் அப்பாவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் இப்பாடலை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். பின்னர் மகேஷ் பாபு, அனிருத், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த ‘பயணி’ மியூசிக் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து ஐஸ்வர்யாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. இந்த ‘பயணி’ மியூசிக் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், “பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவியை தற்போது தோழி’ என்பதாகக் குறிப்பிட்டு தனுஷ் எழுதியிருப்பதைப் பார்த்தால், விவாகரத்தை நோக்கித்தான் இவர்களது வாழ்க்கை போகிறது என்பது உறுதியாகிறது.

தனுஷின் இந்த ட்வீட்டுக்கு இதுவரை ஐஸ்வர்யாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் ஏதேனும் ரியாக்ட் செய்வாரா என்பதை அறிந்து கொள்ள தனுஷின் ரசிகர்களும், ரஜினியின் ரசிகர்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

 
Our Score