அதர்வா முரளி நடித்திருக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி…!

அதர்வா முரளி நடித்திருக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி…!

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கொரியன் திரைப்படமான Old boy’, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘1917’, புகழ் பெற்ற ‘The Revenant’, ‘The Raid’ ஆகிய படத் தொடர்களெல்லாம் இம்மாதிரி ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சிகளுக்காக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இம்மாதிரியான முயற்சிகள் தீவிரமாக நிகழ்ந்ததில்லை. முதல் முறையாக இப்போது Pramod Films நிறுவனத்தின் 25-வது திரைப்படமாக அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் புதிய படத்தில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது.

ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் ஆக்சன் காட்சியாக, இக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சாம் ஆண்டன் இது குறித்து பேசும்போது, “இது எனது நீண்ட நாள் கனவு முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களும், பல காலம் முன்பாகவே, இப்படி ஒரு ஆக்சன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பும், உத்வேகமும் நிறைந்த நடிகர் அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால்தான்  இது சாத்தியமானது.

சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியை திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒரு நாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம். படக் குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் இக்காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்…” என்றார்.

Our Score