full screen background image

‘அமர காவிய’த்தைப் பார்த்து கண்ணீர்விட்ட ஆர்யா..!

‘அமர காவிய’த்தைப் பார்த்து கண்ணீர்விட்ட ஆர்யா..!

தன்னுடைய தோற்றப் பொலிவினாலும், எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணத்தாலும் உள்ளம் கவர் கள்வன் என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா, தன்னுடைய சொந்த பட நிறுவனமான The Show people என்ற புதிய பட நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்துக்கு ‘அமர காவியம்’ எனும் ஒரு உன்னதமான காதல் கதையை தேர்ந்து எடுத்தது ஆச்சரியமில்லை.

இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் என்ற முறையில் ஆர்யாவும் அவருடைய ஓரிரு நண்பர்களும் படம் பார்த்தனர். படம் முடிந்தவுடன் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் துளிகள் தென்பட ஈரமான கண்களுடன் யாரிடமும் பேசாமல் அவர் திரை அரங்கை விட்டு வெளியேறினார். எதையும் மறைத்து பேசி பழக தெரியாதவர் என்ற அறியப்படும் ஆர்யா, கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றார். அங்கே என்ன நினைத்தாரோ… சட்டென தனது உதவியாளரை அழைத்து 143 கேக்குளை வாங்கி வரச் சொனார் .

கேக்குகள் வந்தவுடன் தனது பட குழுவினர் அனைவருக்கும் அதனை அளித்து மகிழ்ந்தார். அது ஏன் 143 கேக் என்ற கேள்விக்கு “143 என்கிற எண் காதலுக்கு மிக முக்கியமான எண்..” என விளக்கம் கொடுத்தாராம் ஆர்யா. “I Love you என்ற அந்த மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம்தான் 143. “படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றிய முதல் செய்கைதான் அது” என்கிறார் ஆர்யா.

படத்தை பற்றி ஆர்யா மேலும் கூறுகையில், “இயக்குனர் ஜீவா ஷங்கர் இதற்கு முன்னர் ‘ நான்’ திரை படத்தை இயக்கியவர் தவிர என் நெருங்கிய நண்பரும்கூட. நாயகன் சத்யா என் தம்பி. கதாநாயகி மியா ஜார்ஜ் – சத்யா ஜோடி ஒரு இனிமையான காதல் கதையை நம் கண் முன் நிறுத்த போவது நிஜம். ஒரு நடிகனாக நான் சினிமாவில் பல படங்களை பார்த்து இருக்கிறேன். அந்த மனநிலையே வேறு . ஆனால் முதல் முறையாக ஒரு தாயாரிப்பாளர் என்ற முறையில் ‘ அமர காவியம் ‘ பார்த்து எனக்கு கிடைத்த பிரமிப்பும், பெருமிதமும் சொல்லில் அடங்காதவை. இந்த உணர்வு என்னை மேலும் தரமான படங்களை தர வேண்டும் என சொல்ல வைக்கிறது…” என்றார்.

இதுவரை சொல்லப்பட்ட காதல் கதைகளில் இது ஒரு காவியம் என்று சொல்லப்படும் ‘அமர காவிய’த்துக்கு, ஆர்யாவைவிட வேறு யார் தகுதி சான்றிதழ் கொடுத்து விட முடியும்…?

எல்லாம் சரிதான் ஆர்யாஜி.. உங்க தயாரிப்பின் முதல் தயாரிப்பான ‘படித்துறை’ படத்தை எப்பத்தான் ரிலீஸ் செய்வீங்க..? படம் பார்த்தவங்க எல்லாரும் அதுவே ஒரு காவியம்ன்றாங்க..! அதைப் போய் முடக்கி வைக்கலாமா..? மனசு வைங்க ஸார்..!

Our Score