full screen background image

இனி தமிழ் படங்களில்தான் அதிக கவனம் – நடிகர் அஜ்மலின் திடீர் முடிவு

இனி  தமிழ்  படங்களில்தான் அதிக கவனம் – நடிகர் அஜ்மலின் திடீர் முடிவு

‘திரு திரு  துரு  துரு’, ‘அஞ்சாதே’, ‘கோ’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர் . தமிழில்  நல்ல வரவேற்பை பெற்ற  படங்களில்  நடித்திருந்தாலும் தனக்கென  ஒரு இடத்தை தக்க  வைக்கலாமே என்று யோசிப்பதற்குள்  தெலுங்கு, மலையாளம்  என்று பறந்துவிட்டார்.

தெலுங்கில்  இரண்டு  படங்களில் நடித்தவருக்கு அங்கேயும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது, மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் தமிழனாக  நடித்திருக்கிறார் .

இப்படி முன்று  மொழிகளிலும்  நடித்து  வந்தவரின் பார்வை இப்போது திரும்பவும் தமிழ் திரையுலகம் பக்கமே வந்திருக்கிறது. இதற்காகவே  மலையாளம், தெலுங்கு படங்களுக்கு கொஞ்ச  நாள் ஓய்வு  கொடுத்துவிட்டு முழுக்க  முழுக்க தமிழ்ப்  படங்களில்  கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இதற்காகவே கேரளாவிலிருந்து சென்னைக்கே  குடி பெயர்ந்துவிட்டார். தமிழில் நல்ல  கதையம்சம்  உள்ள படங்களில் நடிக்க வேண்டுமென்பதற்காக  கதை  கேட்டு வருகிறார்.

“இனி  தமிழில்  ஒரு நல்ல  இடத்தை  பெரும்வரை  தமிழ்ப் படங்களில்  மட்டும்  கவனம் செலுத்தப் போகிறேன்..” என்கிறார் உறுதியாக. இதற்காக  ஒரு இந்தி  பட வாய்ப்பைகூட வேண்டாம் என்று  மறுத்திருப்பது கூடுதல் செய்தி.

 

Our Score