நடிகர் ஆதி நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு முத்திரை முகாம்

நடிகர் ஆதி நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு முத்திரை முகாம்

Let’s Bridge என்ற தொண்டு நிறுவனத்தை நடிகர் ஆதி மற்றும் அவரது நண்பர்கள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு துவைக்கியுள்ளனர். இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதன் முதல் நிகழ்ச்சியாக ‘முத்திரை முகாம்’ என்ற பெயரில் தேர்தலில் வாக்குகளை பதிவிடுவதற்கான விழிப்புணர்ச்சி முகாமை இந்தியத் தேர்தல் ஆணையத்தின்  அனுமதியுடன் பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளார்கள்.

இந்த முத்திரை முகாமில் குழந்தைகள்  ‘நம் எதிர்காலம் உங்கள் கையில் – சிந்தித்து வாக்களிப்பீர்’ என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கைகளில் பதிக்க வைத்து அவர்களிடையே வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும்விதமாக நடித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி ஆகியோர் ஒத்துழமைப்பு கொடுத்து கலந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்று பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை தமிழகமெங்கும் நடத்தப் போவதாக நடிகர் ஆதி கூறியுள்ளார்.

எல்லோரும் நடிப்பதில் இருந்து ரிட்டையடர்டான பின்புதான் அடுத்தக் கட்ட வேலையை பற்றி யோசிப்பார்கள். நடிகர் ஆதியோ.. நடித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலிலேயே தொண்டு நிறுவனத்தைத் துவக்கி நடத்துவது பாராட்டுக்குரியது..

Our Score