full screen background image

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’

கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘திருநெல்வேலி’ திரைப்படம் மூலம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர்  உதயா, கலைப் பயணத்தில் தனது வெள்ளி விழா வருடத்தை குறிக்கும்விதமாக ‘அக்யூஸ்ட்’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாளுகிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா ஆக்ஷன் காட்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன். இப்படத்தை கன்னட திரையுலகில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.

இந்த ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பூஜை சென்னையில் ஜனவரி-2-ம் தேதியன்று நடைபெற்றது. இந்தப் பூஜை நிகழ்வில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து 2025 கோடை காலத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Our Score