‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக ரசிகர்களுக்கு ஒரு போட்டி..!

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக ரசிகர்களுக்கு ஒரு போட்டி..!

நடிகர் சிம்பு மற்றும் புதுமுகமான மஞ்சிமா நடிப்பில்  ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்  உருவாகும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம் பெறும், ‘தள்ளி போகாதே’ என்கிற பாடல் சமூக வலைத்தளங்களில் மிக மிக பிரபலமான பாடலாக மாறி வருகிறது.

இந்த பாடல் ரீமிக்ஸ், டப்  ஸ்மாஷ், என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் பகிர்ந்துக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து ஆர்வமுள்ள, திறமையான இசை அமைப்பாளர்கள் பங்கு கொள்ள உள்ள போட்டி ஒன்றை கவுதம் மேனனும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து நடத்த உள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளப்படும். 

இது பற்றி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்குதாரரான டிவோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஷாகிர் முனீர் கூறும்போது, “இந்த வகை போட்டிகள் ரசிகர்கள் இடையே மேலும் ஆர்வத்தை தூண்டும் என பெரிதும் எதிர்பார்ப்பதாக” தெரிவித்தார். 

Our Score