மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரிக்கும் படம் “ஆய்வுக்கூடம்”. இதில் புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தில் மிக முக்கியமான விஞ்ஞானி மார்ட்டின் லியோ என்ற கேரக்டரில் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிக்கிறார். மற்றும் ப்ரீத்தி, செளந்தர், பிரபுராஜ், ரியாஸ், பவுனி ஜெய்சன், நெல்லைசிவா, செம்புலி ஜெகன், ராஜராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எஸ்.மோகன் (இவர் ஒளிப்பதிவாளர் வி.செல்வாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்)
அனந்தபுரத்து வீடு படத்திற்கு இசையமைத்த ரமேஷ்கிருஷ்ணா இசையமைக்கிறார்.
பாடல்கள் – டாக்டர் கிருதயா, துரைமுருகன், சன்ராஜா.
ஸ்டண்ட் – சூப்பர்குட் ஜீவா
தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம்
தயாரிப்பு – கணபதி
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் திரைப்படக் கல்லூரி மாணவர் அன்பரசன்.
மருத்துவ விஞ்ஞானியாக பாண்டியராஜன் மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் நன்மைகளை கூறி அரசிடம் அனுமதி கேட்கிறார். ஆனால் அரசு அதற்கு அனுமதி தராததால் திருட்டுத்தனமாக இரு மனிதர்களை பிடித்து அவர்களது மூளையை அவர்களுக்கு தெரியாமல் மாற்றி விடுகிறார். மூளை மாற்றப்பட்ட அவர்கள் இருவரும் எப்படி நடந்து கொள்கிறார்கள்..இது தெரிந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது..? மூளை மாற்று திட்டத்தால் விஞ்ஞானி வெற்றி பெற்றாரா என்பதே கதை. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக ஆய்வுக்கூடம் தயாராகிறது.









