‘jet lag’ என்கிற விஷயத்தை மையமாக வைத்து ‘ஆத்யன்’ என்ற தமிழ் படத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் படத்தில், ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபியுடன் நடித்த அவருடைய உறவினர் அபிமன்யு நல்லமுத்து கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளர் முத்து என்கிற நல்லமுத்துவின் மகன். கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். மேலும் ஜெனிஷ், மகேஷ், ஜெயச்சந்திரன், அன்பு, ருத்ரு, வினிதா, நிஷா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாசன், இசை – ஹரி G.ராஜசேகரன், பாடல்கள் – உமாதேவி, தயாரிப்பு – ரஞ்சித்குமார். திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம் மனோஜ்குமார்.
‘ஜெட் லாக்’ என்பது விமானத்தில் பயணம் செய்யும் போது, காலநிலையினால் உடலினில் ஏற்படும் மாற்றமாகும். இந்தியாவில் இருந்து ஒருவர் அமெரிக்காவிற்கு பயணம் செய்கின்றார் என வைத்துக் கொள்வோம். இந்தியாவில் பகல் என்றால் அமெரிக்காவில் இரவு.
இரண்டு நாடுகளுக்கும் உள்ள இந்த காலநிலையால், இந்திய காலநிலையில் இருந்து, அமெரிக்கா காலநிலைக்குள் செல்லும்போது உடல் அந்தகாலநிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயலும் போது, உடல் மிகுந்த சோர்வுற்று தன்னையறியாமல் உறக்கத்திற்கு செல்லும்.
மேலும் தலைவலி, களைப்பு, ஒழுங்கற்ற உறக்க நேரங்கள், இடம், பொருள், நபர் குறித்த குழப்பம், தலை சுற்றல் மற்றும் எரிந்து விழுதல் போன்ற நிகழ்வுகள்கூட வரலாம். இதை மையக் கருவாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியுள்ளதாம்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வடபழனி rkv ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில் சத்யராஜ், சிபிராஜ் மேலும் சில பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.