full screen background image

இப்படி செய்யலாமா ஜி.வி.பிரகாஷ்..?

இப்படி செய்யலாமா ஜி.வி.பிரகாஷ்..?

விஷால் தயாரித்து நடித்திருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் G.V. பிரகாஷ்குமார்.

இலங்கையைச் சேர்ந்த தினேஷ் ஆர்யன், ‘ஆண்ஸ்டடேஜ் ரெகார்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராப் பாடல்களுக்காக புகழ் பெற்றுள்ள இவர் ஒரு சில தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் எழுதிய பாடல் வரிகளைத்தான் இவரிடம் கூறாமலும், இவரது பெயரை வெளியிடாமலும் ஜி.வி.பிரகாஷ் உபயோகித்திருக்கிறார் என்று புகார் கூறியுள்ளார்.

aaryan-1

“சில மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தான் இசையமைக்கும் ஒரு படத்திற்கான பாடலையும், இசையையும் உருவாக்க என்னைக் கேட்டுக் கொண்டார். என்னுடைய புத்தம் புதிய பாடல் ஒன்றை சில மாறுதல்களுடன் தனது படத்திற்கு உபயோகித்துக் கொள்வதாகக் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பாடலை  படத்தின் இயக்குநர் விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஆனால், ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் பாடல்களில் நா.முத்துக்குமார் எழுதியதாகக் கூறப்பட்டுள்ள பாடல் உண்மையில் நான் எழுதியது. ஆனால் நான் குரல் கொடுத்துள்ளதாக மட்டும் வெளியாகியுள்ளது. பாடலைக் கேட்ட போது, அந்தக் குரலும் என்னுடையது அல்ல. என்னுடைய குரலே இல்லாததற்கு என் பெயரையும், ஆனால் என்னுடைய பாடல் வரிகளுக்கு வேறு கவிஞரின் பெயரையும் தந்துள்ளது நியாயமா?

அந்தப்  பாடலில் ”Young kid in the club” என்று ஆரம்பிக்கும் வரிகள் என்னுடையவை. ஒரு மாபெரும் இசை மேதையின் குடும்பத்திலிருந்து வந்த ஜி.வி.பிரகாஷ் இப்படிச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. ‘ராப்’ இசை என்றால் என்னவென்று தெரியாமல் பாடப்பட்டுள்ள அந்த குரல், என்னுடையது என்று சொல்வதும் சரியல்ல” என்று தினேஷ் ஆர்யன் குற்றம் சாட்டியுள்ளார்.

Naan-Sigappu-Manithan - adudio tracks list

இதற்கு ட்வீட்டரில் பதில் அளித்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “இது பொய்யான குற்றச்சாட்டு. அந்தப் பாடலை உண்மையில் நா. முத்துக்குமார்தான் எழுதியுள்ளார். பாடலின் மூன்றாவது பகுதியில் வரும் எட்டு வரிகள் மட்டுமே தினேஷ் ஆர்யன் எழுதியது. ஆனாலும் தினேஷின் பெயர் வர வேண்டும் என்பதால் பாடலைப் பாடியவர்கள் பெயரில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் அவரது பெயரையும் பாடல் எழுதியவர் பெயராக படத்தில் இணைக்கச் செய்வேன்.  அந்த முழுப் பாடலுக்கான இசையையும் அமைத்தது நான்தான்.

GV_PRAKASH

தினேஷின் இலங்கை மொபைல் நம்பர் மட்டுமே என்னிடம் உள்ளது. எனவே அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டு குறித்து என்னை முதலில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் பாடல் பாடிய விஜய் பிரகாஷ் குறித்தெல்லாம் அவர் தவறாக தகவல் பரப்பியிருக்க வேண்டாம். அவர் தைரியமாக என்னை நேரில் அழைத்து பேசட்டும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன் முகநூலில் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை இது :

I am an artiste with morals and self dignity, I am not scared to speak the truth rather than being a cowered. I am extremely disappointed with so called music composer Mr. G.V.Prakash for violating my lyrical content and this should be stopped as many singers, rappers or performers keep their mouth shut when it happens. I am disappointed with G.V.Prakash for few things,

1.Called me asking to work on a full song and tune for a movie.

2. Selecting one of my brand new song to be used in the movie with changes.

3. Then telling me the Director Didn’t like the song!!!!

4. Then not informing me my vocals and lyrics was used in some song.

5. When I message I get this reply, since you wanted an opportunity we have used your vocals and lyrics and made me say thank you!

6. When the song is released I see, My lyrics has been used crediting Na Muthukumar Sir (No Disrespect to you sir) and crediting my name for vocals

7. Then when I hear the song… THAT VOICE DOES NOT BELONG TO ME

8. G.V.Prakash rips my lyrics and given a courtesy credit for vocals which is not mine and it is a total disgrace to Rap Music or (Tamil Hip hop)

I feel insulted and humiliated. Being an establish composer or anyone in this caliber please do not do this type of disgusting things. I see you don’t understand what hip hop or Tamil rap is, if so get to know or rather stop looking down on people who do it good. I am very disappointed and I am not going to let this go.

Dear Fans, The song “Lovely Ladies” from the movie Naan Sigappu Mandian does not contain my vocals…. The lyric which starts “Young Kid in the Club” belongs to me without my vocals rather I be credited for lyrics and I can’t take credit for Dumb Moron rapping without knowing what it is.

WHERE THE HELL IS TAMIL CINEMA GOING?

If I don’t speak this will happen to upcoming artiste who dream to work for Tamil Cinema. Are you serious you come from the same family where The Legend come from?

Thank you Mr. G.V.Prakash and you have to answer this! or you can ignore!! Do Not turn the entire picture around.. please be a man!

Thank you

Aaryan Dinesh Kanagaratnam

Victim

தகவலுக்கு மிக்க நன்றிகள் : செய்திகள்.காம்

Our Score