ஆர்யா படத்தின் டைட்டில் ‘தனிக்காட்டு ராஜா’ இல்லையாம்..!

ஆர்யா படத்தின் டைட்டில் ‘தனிக்காட்டு ராஜா’ இல்லையாம்..!

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் R.B.சௌத்ரி தயாரிக்கும் 88-வது படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்று பெயர் வைத்திருப்பதாக வந்த செய்திகள் உண்மையில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை என்பதுதான் உண்மையாம். ‘மஞ்சப் பை’ படத்தை இயக்கிய ராகவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் ஆர்யாவும், கேத்ரின் தெரசாவும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள தாண்டிக்குடி என்ற கிராமத்தில் நடக்கவிருக்கிறதாம்.

இதற்காக அந்த ஊரில் 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து செப்பனிட்டு செட் போட்டுள்ளார்களாம்.  வரும் மார்ச் 10-ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார்கள்.

Our Score