ஆர்யா-ஐஸ்வர்யா லஷ்மி ஜோடி சேரும் புதிய படம்..!

ஆர்யா-ஐஸ்வர்யா லஷ்மி ஜோடி சேரும் புதிய படம்..!

நடிகர் ஆர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான The Show People மற்றும் Think Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இது ஆர்யா நடிக்கும் 33-வது படமாகும். ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் நடிகை சிம்ரன், தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டை இயக்குநராக பணியாற்ற, S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்யவுள்ளார். V.அருண் ராஜா சிஜி ஹெட்டாக பணியாற்றவுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கவுள்ளார்.

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனுடைய முந்தைய திரைப்படங்களான ‘நாய்கள் ஜாக்கிரதை, ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘டெடி’ போன்று இந்தப் படத்திலும் மற்றுமொரு புதிய முயற்சியை கையாளவிருக்கிறார்..

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படம் பற்றி பேசுகையில், “இந்த திரைப்படம் எல்லா ரசிகர்களையும், ஈர்க்கும்படி இருக்கும் என நம்பிய ஆர்யாவிற்கும், The Show People மற்றும் Think Studios தயாரிப்பாளர்களுக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது முந்தைய திரைப்படங்கள் அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக தமிழுக்கு முற்றிலும் புதுமையான கதைக் களங்கள் கொண்டவையாக இருந்தது. அதேபோல் இத்திரைப்படமும் கண்டிப்பாக புதுமையாக இருக்கும்” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக எளிமையான  பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.

 
Our Score