வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்ரபில் தயாரிப்பாளர்கள் முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்டவன்.’
இந்தப் படத்தில் கே.பாக்கியராஜ் கலெக்டராக நடித்துள்ளார். டிஜிட்டல் விஷன் யூ டியூபர் மகேஷ் கதையின் நாயகனாக நடிக்க, ஜோடியாக வைஷ்ணவி நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ கந்தசாமி, எம்.கே.ஆர், முத்துச்செல்வம், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கி ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மகிபாலன், இசை – கபிலேஷ்வர், சார்லஸ்தனா, படத்தொகுப்பு – லெட்சுமணன், பத்திரிக்கை தொடர்பு – கோவிந்தராஜ். இயக்குநர் வி.வில்லி திருக்கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ளார்.
ஒருவருடைய கஷ்ட நேரத்தில் அவருக்கு சரியான நேரத்தில் யார் உதவுகிறாரோ, அவரே ஆண்டவனாகப் பார்க்கப்படுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
நாட்டில் ஒருபுறம் நகரங்கள் வாழ்கின்றன. மறுபுறம், கிராமங்கள் அழிந்து வருகின்றன. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டு கிராமங்களை வாழ வைக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்.
விரைவில் திரையில் தெரிவார் ‘ஆண்டவன்’!












