விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ துவங்கியது

விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ துவங்கியது

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் மதுரை அன்புச்செழியன் தயாரிக்கும் புதிய படமான 'ஆண்டவன் கட்டளை' நேற்று துவங்கியது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் ‘இறுதிச் சுற்று’ ரித்திகா சிங். மேலும் நாசர், ஆர்.என்.ஆர்.மனோகர், வேல ராம்மூர்த்தி, விடிவி கணேஷ், சிங்கம் புலி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, யோகி பாபு, ஏ.வெங்கடேஷ், பூஜா பாலு, வினோதினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், படத்தொகுப்பு – அனு சரண், இசை – கே, கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, உடை வடிவமைப்பு – ஜெனிபர் ராஜ், உடைகள் – ராமகிருஷ்ணன், பி.ஆர்.ஓ. – நிகில், கதை – அருள்செழியன், இயக்கம் – எம்.மணிகண்டன், தயாரிப்பு – அன்புச்செழியன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது.