full screen background image

“ஆண் பாவம் பொல்லாதது” – உலக சாதனை படத்தின் டிரெய்லர் வெளியீடு!

“ஆண் பாவம் பொல்லாதது” – உலக சாதனை படத்தின் டிரெய்லர் வெளியீடு!

டிரம் ஸ்டிக்ஸ் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில், பிளாக்ஷிப் இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்தப் படத்தின் டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வு, “உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர்” என்ற தலைப்பில் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதுவரை எந்த உலக சினிமாவும் எட்டாத உயரத்தை இந்த நிகழ்வு தொட்டுள்ளது.

ஈரோடு எக்ஸெல் கல்லூரியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், 8000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, காலை 11.30 மணிக்கு தங்களது சமூக ஊடகக் கணக்குகளில் ஒரே நேரத்தில் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர்.

உலக சாதனை இயக்ககத்தின் அதிகாரி Ms. Alice Raynaud கலந்து கொண்டு, “மாணவர்களின் உற்சாகமும், ஒருமித்த செயலும் இந்த சாதனையை சாத்தியப்படுத்தியுள்ளது” என பாராட்டி, சாதனைச் சான்றிதழை வழங்கினார்.

திரைப்பட தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி சக்திவேல் அவர்கள், “இந்தப் படம் மக்களோடு நெருக்கமாக இணையும் என்பதாலேயே, மக்களை வைத்தே டிரெய்லரை வெளியிட முடிவு செய்தோம். இந்த உலக சாதனையை பெருவெற்றியாக்கிய எக்ஸெல் நிறுவனம் மற்றும் மாணவர்களுக்கு நன்றிகள்,” எனக் கூறினார்.

நாயகன் ரியோ ராஜ் உணர்ச்சியுடன், “இது என் ஊர். என் ஊரில் என் படத்தின் டிரெய்லர் இவ்வளவு பிரம்மாண்டமாக வெளியிடப்படுவது எனக்குப் பெருமையும் நெகிழ்ச்சியுமாக உள்ளது,” என்றார்.

எக்ஸெல் கல்லூரி நிர்வாக இயக்குநர் மதன் அவர்கள், “இங்கிருந்து சினிமாவில் முன்னேறும் இளம் குழுவிற்காக, எங்கள் மண்ணில் இப்படியான நிகழ்வு நடப்பது எங்களுக்கே பெருமை” எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் இணை தயாரிப்பாளர் விஜயன், நடிகை மாளவிகா மனோஜ், நடிகர் விக்னேஷ்காந்த், இயக்குனர் கலையரசன், டிரம்ஸ்டிக்ஸ் மணிகண்டன் மற்றும் விவேக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உலக சாதனைப் பயணத்தைத் தொடங்கிய “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் வரும் அக்டோபர் 31 முதல் உலகமெங்கும் வெளியாகிறது.

Our Score