full screen background image

ஆண் தேவதையை பறக்க வைத்த 11 பிரபலங்கள்..!

ஆண் தேவதையை பறக்க வைத்த 11 பிரபலங்கள்..!

சிகரம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் அ.ஃபக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும்  சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் முஸ்தபா, குட்டி என்று நால்வரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஆண் தேவதை’. 

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாகவும், ரம்யா பாண்டியன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும்,  ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மு. காசிவிஸ்வநாதன் படத் தொகுப்பு செய்துள்ளார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சீடரும், ‘ரெட்டைச் சுழி’ படத்தை இயக்கியவருமான இயக்குநர் தாமிரா, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றி மாறன், சீனு ராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள். 

இவர்கள் அனைவருமே,  “இந்த ‘ஆண் தேவதை’ திரைப்படம் இன்றைய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மிக முக்கிய கருத்தைப் பேசுகிறது. தாமிராவும், சமுத்திரக்கனியும் இணைந்துள்ள இப்படம்  வெற்றி பெற வேண்டும் . அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்,,,” என்றனர்.

இந்த ‘ஆண் தேவதை’ படத்தின் டிரெயிலர், இதுவரையிலும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பார்வையாளர்களைக் கடந்து பறந்து கொண்டிருக்கிறது. 

Our Score