full screen background image

கனடாவில் தயாராகியிருக்கும் தமிழ்த் திரைப்படம் ‘ஆக்குவாய் காப்பாய்’..!

கனடாவில் தயாராகியிருக்கும் தமிழ்த் திரைப்படம் ‘ஆக்குவாய் காப்பாய்’..!

கனடா நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு தமிழ் பெண்ணின் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் “ஆக்குவாய் காப்பாய்”.

R Productions and Lunar Motion Pictures இணைந்து தயாரித்துள்ளது மற்றும் தயாரிப்பு மேற்பார்வையை R.முத்துகுமார் மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கிருந்துஜா மற்றும் ஜெயப்பிரகாஷ் டேனிஷ்ராஜ், செந்தில்மகாலிங்கம், மதிவாசன், சுரபி ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுக்க, முழுக்க கனடாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் ஒளிப்பதிவை ஜீவன்ராம் ஜெயம் & தீபன் ராஜலிங்கம் ஆகியோர் கவனித்து உள்ளனர். இசை ரிஜு R.கிருஷ்ணா, எடிட்டிங் முகன் விக்கி, Technical Director P.T.சந்திரகாந்த், தயாரிப்பு நிர்வாகி S.ஆனந்த்.

இப்படம் பலமுறை மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட “அரங்காடல் ” என்கிற வெற்றி பெற்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இக்கதை சகாப்தன் என்கிற நாடக ஆசிரியர் எழுதியது. இந்த மேடை நாடகத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து முழு நீள படமாக தயாரித்து உள்ளனர்.

சகாப்தன் எழுதிய கதையை திரைக்கதை அமைத்து, இயக்கி இருப்பவர் மதிவாசன். இவர் கனடா நாட்டில் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகர்.

கனடாவில் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலையில் உள்ள தனது கணவனை ஆறு வருட காலம் போற்றி பாதுகாத்து வருவதோடு தன் பல வாழ்க்கை போராட்டங்கள் நடுவே ஆறு வயது பெண் குழந்தையும் வளர்ந்து படிக்க வைத்து வருகிறார். இப்படி வாழ்க்கை போராட்டத்தால் சிரமப்படும் பெண்ணை உற்றார் உறவினர் சமுதாயம் பார்க்கும் தப்பான கண்ணோட்டம், இவற்றை எல்லாம் எப்படி கடந்து போனாள்? என்பதே அடுத்தக் கட்டம். பெண் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் ஏற்படுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

Lunar motion pictures R- productions இணைந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகிறது.

Our Score