மனிதர்களிடையே மூளையை மாற்றி வைத்தால் எப்படியிருக்கும்..?

மனிதர்களிடையே மூளையை மாற்றி வைத்தால் எப்படியிருக்கும்..?

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரித்திருக்கும் படம் ‘ஆய்வுக்கூடம்’. இதில் நடிகர் பாண்டியராஜன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் கதை பற்றி கேள்விப்பட்டு படத்தை பார்த்த ஆச்சரியப்பட்ட தயாரிப்பாளர் அறிவழகன், படத்தை வாங்கி தனது  P.K.A. பிலிம்ஸ் சார்பில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க சிங்கப்பூர்,  மலேசியா,  துபாய், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் வெளியிடுகிறார்.

படத்தில் புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மற்றும் ப்ரீத்தி, செளந்தர், பிரபுராஜ், ரியாஸ், பவுனி ஜெய்சன், நெல்லை சிவா, செம்புலி ஜெகன், ராஜராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - எஸ்.மோகன் (இவர் ஒளிப்பதிவாளர் வி.செல்வாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்). அனந்தபுரத்து வீடு படத்திற்கு இசையமைத்த ரமேஷ்கிருஷ்ணா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் - டாக்டர். கிருதயா,  துரைமுருகன், சன் ராஜா. ஸ்டண்ட் - சூப்பர்குட் ஜீவா, தயாரிப்பு மேற்பார்வை - ஆத்தூர் ஆறுமுகம், தயாரிப்பு – கணபதி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் அன்பரசன்.

படம் பற்றி பேசிய இயக்குநர் அன்பரசன், “நடிகர் பாண்டியராஜன் இந்தப் படத்தில் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராக. ஒரு ஆராய்ச்சியின் பொருட்டு மனநோயாளி ஒருவரின் மூளையை சண்டை பயிற்சியாளருக்கும், சண்டை பயிற்சியாளரின் மூளையை மனநோயாளிக்கும் மாற்றுகிறார்.  இதனால் ஏற்படும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.  திரைக்கதையை காமெடியாக அமைத்திருக்கிறோம். இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் கொடுத்து பாராட்டி உள்ளனர்..” என்றார்.